சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள பேட்ட படத்தின் இரண்டாவது சிங்கிள் டிராக் பாடலை நாளை வெளியிடுவதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தகவலை வெளியிட்டது.இதை அடுத்து ரஜினி ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமையவுள்ளது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இந்த படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. மேலும் இன்று 6 மணிக்கு இப்படத்தின் “Ullaallaa” என்ற செகண்ட் சிங்கிள் டிராக் வெளியாக உள்ளது. இதற்கான போஸ்டரை சன் பிக்சர்ஸ் நிறுவனம் நேற்று ட்விட்டரில் வெளியிட்டு இருந்தது. இந்த போஸ்டரில் ரஜினிகாந்த் நடனமாடுவது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை மீண்டும் ஒரு அறிவிப்பை வெளியிட்டது படத்தின் தயாரிப்பு நிறுவனம் சன் பிக்சர்ஸ்.
படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பகிர்ந்துள்ள ட்விட்டர் பக்கத்தில், “நாளை வெளியாக இருக்கும் “Ullaallaa” செகண்ட் சிங்கள் ட்ராக்கை. பாடலாசிரியர் விவேக் வரிகளில், அனிருத் இசையமைப்பில் நாளை வெளியாகும் இந்த பாடலுக்காக ரஜினி ரசிகர்கள் அனைவரும் எதிர்ப்பாத்து காத்திருக்கின்றனர்.