96 படத்தில் நடித்த குட்டி ஜானுவா இது..!! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்…

பள்ளிப்பருவ காதலை அழகாக உணர்வுப்பூர்வமாக எடுத்து காட்டும் படம் தான் 96. இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றிபெற்றது. இப்படத்தில் வரும் ஜானு ராம் கதாபாத்திரம் அனைவரது மனதையும் கவர்ந்தது. 96 படத்தில் விஜய் சேதுபதி, திரிஷா என பலர் நடித்துள்ளனர். மேலும், இருவருக்கும் இதுவரை இல்லாத அளவிற்கு இது ஒரு முக்கிய படமாக அமைந்தது.

இப்படத்தில் பள்ளிப்பருவ விஜய் சேதுபதியாக பிரபல குணசித்ர நடிகர் எம்எஸ் பாஸ்கரின் மகன் ஆதித்யா பாஸ்கர் நடித்திருந்தார். அதேபோல, திரிஷாவின் இளம் வயது தோற்றத்தில் நடித்தவர் கௌரி கிஷன் என்பவர் நடித்திருந்தார். 96 திரைப்படம் மூலம் பிரபலமாகிவிட்ட இவருக்கும் வாய்ப்புகள் பல தேடி வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க, ரசிகர்கள் தங்களை மறந்து விடாமல் இருக்க நடிகைகள் பின் பற்றும் அதே வழியை இவரும் செய்து வருகிறார்.

அந்த வகையில், கொரோனா லாக்டவுன் காரணமாக வீட்டிலேயே முடங்கி கிடப்பதால் மொட்டை மாடியில் இருந்தபடி போட்டோ ஷூட் நடத்தி வருகிறார்கள். அந்த வகையில், பாடவை, தூக்கி கட்டிய சட்டை என படு சூடான கவர்ச்சி போஸ் கொடுத்து இளசுகளின் கவனத்தை கவர்ந்துள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், இதை நம்ம ராம் பார்த்த என்ன நெனைப்பான்.. என்ன சிம்ரன் இதெல்லாம்.. என்று கலாய் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published.