81 வயது பாட்டியை காதலித்து திருமணம் செய்த 36 வயது இளைஞர்.. தம்பதியை பிரித்த ஒரு விடயம்!

பிரித்தானியாவை சேர்ந்த 81 வயது பாட்டியும், எகிப்த்தை சேர்ந்த 36 வயது நபரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் விசா பிரச்சினையால் இருவரும் பிரிந்து வெவேறு இடங்களில் வசித்து வருகின்றனர். பிரித்தானியாவை சேர்ந்தவர் ஐரிஸ் ஜோன்ஸ்(81). இவர் £220,000 மதிப்புடைய சொகுசு பங்களாவில் வசித்து வருகிறார். ஐரிஸ் எகிப்து நாட்டை சேர்ந்த மொஹமத் அஹ்மத்(36) என்பவரும் பேஸ்புக் மூலம் கடந்த 2019ல் நட்பானார்கள். இது பின்னர் காதலாக மாறியது.

அதே ஆண்டு நவம்பர் மாதம் ஐரிஸ் தனது காதலனை காண எகிப்துக்கு சென்றார். அங்கு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில் பிரித்தானியாவுக்கு சென்று வசிக்க முடிவு செய்தனர். அதன்படி முதலில் ஐரிஸ் பிரித்தானியாவுக்கு வந்தார். ஆனால் விசா பிரச்சினையால் அவர் கணவர் மொஹமத் பிரித்தானியாவுக்கு இன்னும் வரமுடியவில்லை. இது குறித்து ஐரிஸ் கூறுகையில், எப்போது என் கணவர் என்னுடன் ஒன்றுசேருவார் என தெரியவில்லை.

நான் விரும்பும் ஒருவரிடமிருந்து நான் பிரிந்துவிட்டேன், அது மிகவும் கடினமான ஒன்றாகும். மொஹமத் கூறுகையில், நாங்கள் எங்கு வாழ்கிறோம் அல்லது அவள் எவ்வளவு பணக்காரர் அல்லது ஏழை என்று எனக்கு கவலையில்லை, நான் ஐரிஸ் உடன் இருக்க விரும்புகிறேன். பிரித்தானியா அல்லது எகிப்து எங்கு வாழ்ந்தாலும் எனக்கு கவலையில்லை. பிரித்தானியா அழகான நாடு என எனக்கு தெரியும், ஆனால் உலகில் எங்கும் ஐரிஸ் உடன் வாழ தயாராக இருக்கிறேன் என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!