80-களின் கனவு கன்னி நடிகை அமலாவா இது? ஆளே அடையாளம் தெரியாம மாறிட்டாங்க பாருங்க! புகைப்படம் இதோ

80-களில் எல்லோருடைய கனவு கன்னியாக இருந்தவர் நடிகை அமலா. இவர் அறிமுகமான திரைப்படம் மைதிலி என்னை காதலி 1986-ம் ஆண்டு வெளியானது. தன்னுடைய இயல்பான நடிப்பாலும் அழகான தோற்றத்தாலும் ரசிகர்களை அதிகம் கவர்ந்து இருந்தாங்க நடிகை அமலா. மெல்லத் திறந்தது கதவு, அக்னி நட்சத்திரம், மாப்பிள்ளை போன்ற பல வெற்றி படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்திருக்கிறார்.

90-களின் ஆரம்பத்தில் ஓரிரு படங்களில் நடித்த அமலா, அதன்பின் தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் மட்டும் நடித்து வந்தார். அவர் புகழின் உச்சத்தில் இருக்கும் போதே தன்னுடன் சேர்ந்து நடித்த நாகார்ஜுனாவை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு நாகா சைதன்யா மற்றும் அகில் என்ற மகன்கள் இருப்பது அனைவரும் அறிந்ததே. நீண்ட இடைவெளிக்கு பிறகு 2012ஆம் ஆண்டில் ‘ லைஃப் இஸ் பியூட்டிஃபுல் ‘என்ற தெலுங்கு படத்தில் அம்மா வேடத்தில் நடித்திருந்தார்.

இப்பொழுது மீண்டும் ஸ்ரீ கார்த்திக்கின் இயக்கத்தில் பிரபுவின் தயாரிப்பில் உருவாக இருக்கும் தமிழ் படத்தில் ஹீரோவுக்கு அம்மாவாக நடிக்கவிருக்கிறார். தனது மருமகள் சமந்தா ஒரு பக்கம் நடித்து அசதி கொண்டு இருக்கையில் – மாமியார் நான் மட்டும் சளைத்தவளா என்ன என்று கேள்வி கேட்கும் வகையில் பல புது கதைகளை தேர்ந்து எடுத்து நடிக்க திட்டம் தீட்டி உள்ளார். ஒரு குடும்பமே இப்படி மாறி மாறி நடிப்பு துறையில் நடித்து கொண்டும் ரசிகர்களை கொண்டாடும் வகையில் செயல் படுவதும் ஆச்சிரியமான உண்மை தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *