72 குண்டுகள் முழங்க எஸ்.பி.பியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது..! வெளியான இறுதி நிமிட புகைப்படங்கள்

தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களில் ஒருவர் எஸ்.பி.பி. இவர் ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடியவர் எம்.ஜி.எம் மருத்துவமனையில் கொரோனா காரணமாக அனுமதிக்கப்பட்டவர் உடல்நல குறைவு காரணமாக நேற்று மரணமடைந்தார். . எம்.ஜி.ஆர் நடித்த படத்தில் ஆயிரம் நிலவே வா பாடல் இவரை எங்கேயோ கொண்டு சென்றது. அதோடு ரஜினி, கமல், விஜய், அஜித், சல்மான் கான், சிரஞ்சீவி, விஷ்ணுவர்தன் என இவர் இந்தியாவின் அனைத்து சூப்பர் ஸ்டார்களுக்கும் பாடியுள்ளார்.

அவர் பாடல்களை கேட்கும் போது நமது மனது அப்படியே லேசாகும். ஆனால் இன்று அவர் நம்முடன் இல்லை, இது எல்லோருக்கும் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.  எஸ்.பி.பியின் உடல் முதலில் மருத்துவமனையில் இருந்து நுங்கைபாகத்தில் உள்ள அவரின் வீட்டிற்கு எடுத்து செல்லப்பட்டது. அதன்பின் நேற்று இரவு 8.00 மணி அளவில் எஸ்.பி.பியின் உடல் தாமைரைப்பாக்கத்தில் உள்ள அவரின் பண்ண வீட்டிற்கு எடுத்த வரப்பட்டுள்ளது.

இன்று காலை 10.20 மணி அளவில் துவங்கிய எஸ்.பி.பியின் இறுதி சடங்கு முடிந்து தற்போது 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையோடு எஸ்.பி.பியை அவரது பண்ணை வீட்டில் அடக்கம் செய்துள்ளன. எஸ்.பி.பியை அடக்கம் செய்யும் பொழுது எடுக்கப்பட்ட, மனதை உறைய வைக்கும் காட்சிகள் புகைப்படங்களாக வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.