இந்தியாவில் முதியவரை இளம்பெண் திருமணம் செய்து கொண்ட நிலையில் முதலிரவில் கணவரின் விலையுயர்ந்த பொருட்களுடன் ஓட்டம் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தின் சர்கோதா மாவட்டத்தை சேர்ந்தவர் முகமது முஸ்தபா (70). இவருக்கும் நஜ்மா பிபி (28) என்ற இளம்பெண்ணுக்கும் நேற்று முன்தினம் திருமணம் நடைபெற்றது. முஸ்தபாவுக்கு இது இரண்டாம் திருமணம் என்ற நிலையில், நஜ்மாவுக்கு ரூ.70000 பணம் மற்றும் முதல் மனைவியின் நகைகளை அவர் கொடுத்தார்.

இந்நிலையில் முதலிரவில் நஜ்மா தனது கணவர் முஸ்தபாவுக்கு பாலில் தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்த நிலையில் முஸ்தபா மயங்கினார். பின்னர் காலையில் முஸ்தபா எழுந்த போது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. காரணம், வீட்டில் இருந்த விலையுயர்ந்த பொருட்களை திருடி கொண்டு நஜ்மா ஓட்டம் பிடித்துள்ளார்.
சுமார் 4 மணி நேரமாக அங்கும் இங்கும் அலைந்து தேடி உள்ளார் ஆனாலும் அவர் கிடைக்கவில்லை. பின்னர்தான் தெரிந்தது புதுப்பெண்ணுக்கு அவர்கள் போட்ட தங்கம் மற்றும் வெள்ளி நகைகளுடன் ஓடி போய்விட்டார் என்று.
இது குறித்து பொலிசில் புகார் அளித்துள்ள முஸ்தபா, நஜ்மா ஒரு கும்பலுடன் சேர்ந்து என்னை ஏமாற்றிவிட்டார். இது குறித்து விசாரித்து அவர்களை கைது செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.