7 மாத கர்ப்பிணி பெண்ணுக்கு ஸ்கேன் எடுத்த போது காத்திருந்த அதிர்ச்சி

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் புனிதா ராணி (24). 7 மாத கர்ப்பிணியான இவருக்கு தீராத தலைவலி, மயக்கம் மற்றும் வாந்தி ஏற்பட்ட நிலையில் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு எடுக்கப்பட்ட எம்.ஆர்.ஐ ஸ்கேனில் சிறுநீரகத்தின் மேல் புறம் உள்ள வலது மற்றும் இடது அட்ரீனல் சுரப்பியில் கட்டிகள் இருப்பது கண்டு மருத்துவர்கள் அதிர்ந்தனர். அட்ரீனல் சுரப்பி, உடலின் தண்ணீர் மற்றும் உப்பு சத்தை சமநிலைப்படுத்தும். கர்ப்பிணி பெண்ணுக்கு அட்ரீனல் சுரப்பியில் இரு புறமும் கட்டி வருவது மிக அபூர்வமானதாக மருத்துவ உலகில் கூறப்படுகிறது.

இதையடுத்து மருத்துவர்கள் 5 மணி நேரம் போராடி புனிதா ராணி சிறுநீரகத்தில் இருந்த அட்ரீனல் சுரப்பிகளையும் அதில் இருந்த கட்டிகளை அகற்றினர். கட்டிகளை மட்டும் தனியாக அகற்ற முடியாது என்பதால் மருத்துவர்கள் அட்ரீனல் சுரப்பி கட்டிகளையும் சேர்த்து அகற்றினர். இடதுபுறம் அகற்றப்பட்ட கட்டி ½ கிலோ இருந்தது. வலதுபுறம் கட்டி 300 கிராம் இருந்தது. இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், அட்ரீனல் கட்டியானது 50 லட்சத்தில் ஒருவருக்கு மட்டுமே வரும் அரிய நோயாகும். அறுவை சிகிச்சைக்கு பிறகு தற்போது புனிதா ராணியின் வயிற்றில் இருக்கும் குழந்தையின் இதய துடிப்பு நன்றாக உள்ளது என கூறியுள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published.