67 வயதில் முண்ணனி நடிகை லட்சுமி எப்படி இருக்காங்க பாருங்க! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

தமிழ் திரையுலகில் ஒருகாலத்தில் முண்ணனி நடிகையாக வலம் வந்த லட்சுமி. இப்போது 67 வயதில் முடியெல்லாம் நரைத்து, வயோதிக நிலையில் இருக்கும் புகைப்படம் வெளியாகி உள்ளது. இதைப் பார்த்த ரசிகர்கள் எப்படி இருந்த லட்சுமி, இப்படி ஆகிட்டார் என வேதனையோடு பகிர்ந்து வருகின்றனர். ‘இயக்குனர் மல்லியம் ராஜகோபாலால் தமிழ் திரையுலகுக்கு அறிமுகம் செய்யப்பவர் நடிகை லட்சுமி. 1968ல் வெளியான ஜீவனாம்சம் திரைப்படம் மூலம் தமிழுக்கு அறிமுகமானார்.

1977ல் சிலநேரங்களில் சில மனிதர்கள் படத்தில் நடித்ததற்காக லெட்சுமிக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கினார். தொடர்ந்து முதன்மைப்பாத்திர வாய்ப்பு இழந்து துணைப்பாத்திரங்களில் நடிக்கத் துவங்கினார். இதுவரை 400 படங்களுக்கும் மேல் நடித்திருக்கும் லெட்சுமி, ஜீன்ஸ் படத்தில் பாட்டியாக நடித்தார். அது செம ஹிட்டானது. சின்னத்திரையில் தமிழில் அச்சமில்லை அச்சமில்லை என்னும் அரட்டைத் தொடரையும் நடத்தினார்.

அதேபோல் கன்னடத்தில் அது கதே அல ஜீவனா என்னும் அரட்டைத் தொடரை நடத்திவருகிறார். லெட்சுமிக்கு இப்போது 67 வயது ஆகிறது. அவரது முடியெல்லாம் நரைத்து வயோதிகத் தோற்றத்தில் இருக்கும் அவரது புகைப்படம் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதைப் பார்ப்பவர்கள் நடிகை லெட்சுமியா இது? என ஆ ச்சர்ய த்தில் மூழ்கிப் போயுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *