பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது. தற்போது ஹிந்தியில் நடந்துவரும் 12 சீசன் பிக்பாஸ் நிகழ்ச்சியும் அப்படித்தான். இந்த சீசன் துவங்கியபோது 28 வயதாகும் பாடகி Jasleen Matharu, 65 வயதாகும் Anup Jalotaவை காதலிப்பதாக கூறியது பெரிய சர்ச்சையானது. 3 வருடமாக காதலித்து வருவதாக அந்த பாடகியே நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் சல்மான் கானிடம் தெரிவித்தார். இந்நிலையில் சென்ற வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து Jasleen Matharu வெளியேற்றப்பட்டுள்ள நிலையில் இது பற்றி அவர் பேட்டியளித்துள்ளார். “இது ஒரு பிராங்க். மக்களிடம் பிராங்க் (Prank) செய்யத்தான் இப்படி கூறினேன். நான் உண்மையில் அவரை காதலிக்கவில்லை. இது இவ்வளவு பெரிய சர்ச்சையாகும் என எதிர்பார்க்கவில்லை” என அவர் கூறியுள்ளார்.
