மல்ஹார் ரத்தோட் இவர் ஒரு பாலிவுட் கதாநாயகி ஆவார். இவர் பல்வேறு சின்னத்திரை சீரியல்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் ஒரு சமூக ஊடகம் அவரிடம் கடந்து வந்த பாதை குறித்து பேட்டி எடுத்தது. அந்த பேட்டியின் போது அவர் பல்வேறு திடுக்கிடும் உண்மைகளை எடுத்துரைத்தார். சில ஆண்டுகளுக்கு முன்னர் பாலிவுட் திரையுலகில் என்னுடைய அதிர்ஷ்டத்தை சோதித்து பார்ப்பதற்காக நுழைந்தேன். முதன்முதலில் 65 வயது தயாரிப்பாளரிடம் வாய்ப்பு கேட்டு சென்றேன். அப்போது அவர் எனக்கு ஒரு படத்தில் சிறிய பாகம் இருப்பதாக கூறினார். ஆனால் அதில் நடிப்பதற்கு அவர் என்னுடைய மேலாடையை கழுட்டுமாறு கூறினார்.
இதனால் நான் பேரதிர்ச்சி அடைந்தேன். உடனடியாக நான் அந்த இடத்தை விட்டு வெளியேறினேன். திரையுலகத்திற்கு புதிது என்பதால் என்ன செய்வதென்று எனக்கு தெரியவில்லை” என்று பேட்டியளித்தார்.இந்த பேட்டியானது பாலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுமுகம் என்றாலும் 65 வயது தயாரிப்பாளர் இப்படியா நடந்து கொள்வது?
சினிமா துறைகளில் பல நல்ல மனிதர்கள் இருந்தாலும் இது போன்ற ஒரு சிலரும் இருக்க தான் செய்கிறார்கள். திரைத்துறையில் சாதிக்க பல பிரச்சனைகளை தாண்டி தான் வரவேண்டியது உள்ளது என்று புலம்புகின்றனர் ஒரு சில நடிகைகள்.