சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் நடிகர். இவருக்கு உலகம் முழுதுமே பிரமாண்ட ரசிகர்கள் வட்டம் உள்ளது. தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் கைகோர்த்து இயக்க வரும் படம் அண்ணாத்த. இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து நடிகை குஷ்பூ, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா மற்றும் நடிகர் பிரகாஷ் ராஜ், சதீஸ், சூரி என திரையுலக பட்டாளமே ஒன்றிணைந்து நடித்து வருகிறார்கள்.

இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் பல படங்கள் நடித்துள்ளார் ரஜினிகாந்த். அதில் துவக்கத்திலேயே நிறுத்தப்பட்ட படம் ராணா. ஆம் இப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் கூட வெளிவந்திருந்ததை நாம் அறிவோம். இந்நிலையில் 6 மாதத்திற்கு முன்பு ரஜினிகாந்த், கேஎஸ் ரவிக்குமாரை அழைத்து 2014 ஆம் ஆண்டு கைவிட்ட ‘ராணா’ என்ற படத்தின் கதையை மீண்டும் கேட்டதாக அவர் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இதனால் மீண்டும் ராணா படத்தின் கதை வேறொரு தலைப்பில் வெளியாக அதிக வாய்ப்புகள் இருக்கிறது என்று தெரிவிக்கின்றனர். மேலும் இப்படம் தான் ரஜினியின் அடுத்த படமாக இருக்குமோ என்று சமூக வலைத்தளங்களில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.