6 வருடங்கள் கழித்து பகத் பாசில், இதனால் தான் நஸ்ரியாவை காதலித்தேன்என விளக்கம்!!

எக்ஸ்பிரஷன் குயின் என தமிழ் சினிமா ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர் நஸ்ரியா நாசிம். அதேபோல் மலையாள சினிமாவின் கமலஹாசன் ஆக வலம் வருபவர் பகத் பாசில். பகத் பாசில் மற்றும் நஸ்ரியா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். நஸ்ரியா பகத் பாசிலை திருமணம் செய்யும் போது பாசிலை விட 12 வயது சிறியவர். இருந்தாலும் காதலித்து திருமணம் செய்து கொண்டது ரசிகர்களிடையே பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதற்கான காரணம் தெரியாமல் ரசிகர்கள் விழித்துக் கொண்டிருந்தனர். அதைப்பற்றி பகத் பாசில் கூறுகையில், பெங்களூரு டேய்ஸ் படப்பிடிப்பில்தான் நஸ்ரியா மீது அவருக்கு காதல் ஏற்பட்டது. அதுவரை பகத் பாசில் நடிக்கிறார் என்றால் அனைத்து நடிகர்களும் அவருக்கு ஜால்ரா அடிக்க தான் பார்ப்பார்களாம். ஆனால் நஸ்ரியா பகத் பாசில் என்ற ஒரு ஆளை பார்ப்பதில் அவ்வளவு ஆர்வம் காட்டவில்லையாம்.

பகத் பாசில் எப்படியாவது நஸ்ரியா கவனத்தை ஈர்க்க வேண்டும் என்ற எண்ணம்தான் பின்னர் காதலாக மாறியது என குறிப்பிட்டுள்ளார். தன்னுடைய காதலை சொல்ல முடியாமல் அவஸ்தைப்பட்ட பகத் பாசில் இடம், நஸ்ரியா தானாகவே வந்து வெளியே செல்லலாமா என கேட்டுள்ளார். அதன் பிறகுதான் இருவரும் தங்களுடைய காதலை வெளிப்படுத்தி பெற்றோர்கள் சம்மதத்துடன் 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.