50 வயதில் இரண்டாம் திருமணம் செய்த நடிகர் ராஜ்கிரண்! முதன் முறையாக வெளியான குடும்ப புகைப்படம்

தமிழ் சினிமாவில் 80கல் முதல் இன்றுவரை தன் புகழ் மங்காமல் இருக்கும் ஒரு நடிகர்தான் ராஜ்கிரண். குணச்சித்திர வேடங்களில் அன்று முதல் இன்று வரை கலக்கிக்கொண்டிருக்கும் ராஜ்கிரண் பல படங்களில் கதாநாயகனாகவும் கலக்கியுள்ளார். இவர் நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார். இவரது உண்மையான பெயர் காதற் மொகிதீன். சினிமாவுக்கு வேண்டி தனது பெயரை ராஜ்கிரண் என்று மாற்றிக்கொண்டுள்ளார்.

இவ்வளவு புகழ் சினிமாவில் இருக்கு இருந்தாலும் இவர் 30 படங்கள் மட்டுமே நடித்துள்ளார். ஆரம்பத்தில் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனராக இருந்துள்ளார் பின்புதான் நடிகராக உருவெடுத்துள்ளார். இவர் நாயகனாக நடித்த அரண்மனைக்கிளி, என் ராசாவின் மனசிலே ஆகிய படங்கள் இன்றும் மக்கள் மத்தியில் பிரபலம். வெளியான சமயத்திலும் அதிரிபுதிரி ஹிட்டடித்தது. பிறகு குணச்சித்திர கதாபாத்திரங்களில் நந்தா, சண்டக்கோழி, பாண்டவர் பூமி ஆகிய சூப்பர்ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

கடைசியாக சண்டக்கோழி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்திருந்தார். இவரது முதல் திருமணம் இவரது மனைவியுடனான கருது வேறுபாடு காரணாமாக விவகாரத்தில் முடிந்தது. பின்னர் ராஜ்கிரண் தனது 50வது வயதில் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் தற்போது இவர்களது குடும்பபுகைப்படம் முதல்முறையாக சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.