80 களில் சினிமா துறையில் பணியாற்றிய பல பேர் நம் மனதில் நிற்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். அதையும் தாண்டி ஒரு சிலர் தன்னுடைய தனித்திறமையை காண்பித்ததால் நம் மனதில் இன்றும் நிலைத்து நிற்கிறார்கள். அந்த வரிசையில் நடிகை விஜசாந்தியும் ஒருவர் தான்.. நடிகையாக இருந்து பின் அரசியல் வாதியாக இருந்து வருபவர் நடிகை விஜய்ஷாந்தி.. இவரது படங்கள் 80, 90களில் பாக்ஸ் ஆபிஸில் அதிகம் கலக்கியதால் முதன்முதலாக லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்டவர் இவரே. இவர் தெலுங்கில் Sarileru Neekevvaru படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார், வரும் ஜனவரி 11ம் தேதி வெளியாக உள்ளது.

இப்பட புரொமோஷன் நிகழ்ச்சியில் அவர் பேசும்போது தான் இதுவரை குழந்தை பெறாதது ஏன் என்று பேசியுள்ளார். அதில் அவர், என்னுடைய முழு நோக்கம் மக்களுக்கு சேவை செய்வது, இதனால் குழந்தை வேண்டாம் என்று முடிவு செய்தேன். என் கணவரிடமும் கேட்டதற்கு ஒப்புக் கொண்டார் என்றார்.
எனக்கு இன்ஸ்பிரேஷன் என்றால் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் தான். குழந்தைகள் பெற்றுக் கொள்ளாமல் தனது வாழ்க்கையை மக்களுக்காக சேவை செய்தார் என்றார். இந்த விஷயம் பல மனத்திலும் ஒரு சிலவற்றை யோசிக்க செய்கிறது என்று தான் சொல்ல வேண்டும்