44 வயதில் கொள்ளை அழகில் நடிகை மீனா.. வெளியான புகைப்படம் வாயடைத்துப்போன ரசிகர்கள்!!

தமிழ் சினிமாவில் அன்று கொடி கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை மீனா .இவர் தனது முதல் படத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்து அந்த படம் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றது.பின்பு தனது சினிமா வாய்ப்பை தக்கவைத்து படிபடியாக மேல வந்து கதாநயாகியாக நடிக்க ஆரம்பித்தார்.இவர் பல முன்னணி பிரபலங்களுடன் நடித்து அந்த படங்கள் அனைத்தும் வெற்றி படமாக அமைந்தது .அவர் தனகென்று ஒரு ரசிகர் கூட்டத்தையே வைத்துள்ளார்.

நடிகை மீனா 2008ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.அவர்களுக்கு நைனிகா என்ற பெண் குழந்தை உள்ளது. அண்ணாத்த திரைப்படத்திற்காக மீனா டப்பிங் பேசிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.சி றுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் ‘அண்ணாத்த’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இமான் இசையமைக்கும் இந்த படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது.

இந்தப் படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, சூரி, சதீஷ், ஜெகபதி பாபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.தற்போது அண்ணாத்த படத்தின் டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே ரஜினி அண்ணாத்த படத்திற்கான டப்பிங் பணிகள் துவங்கிய நிலையில், மீனாவும் தற்போது டப்பிங் பணியினை தொடங்கியுள்ளார்.

அவர் படத்திற்கு டப்பிங் பேசியுள்ள புகைப்படங்கள் மற்றும் இயக்குனர் சி றுத்தை சிவா உடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

நடிகை மீனா பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்தப் படத்தின் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

‘அண்ணாத்த’ திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு வரும் நவம்பர் மாதம் 4ம் தேதி வெளியாக இருப்பதாக ஏற்கனவே படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.