4வது முறையா கர்ப்பம்! மனைவியின் பிரசவத்தை நேரலையில் ஒளிபரப்பப்போகும் பிரபல நடிகர்!

தனது மனைவியின் பிரசவத்தை நேரடி ஒளிபரப்பு செய்ய திட்டமிட்டுள்ளதாக, தெலுங்கு நடிகர் விஷ்ணு மஞ்சு கூறியுள்ளார். இதுபற்றி ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள செய்தியில், ”பலகட்ட பேச்சுவார்த்தை,  சண்டை சச்சரவுகளை கடந்த நிலையில் அழகான என் மனைவி விரானிகாவின் முழு சம்மதத்துடன் அவரது பிரசவ நிகழ்வை இன்ஸ்டாகிராமில் நேரடியாக ஒளிபரப்பு செய்ய திட்டமிட்டுள்ளேன். இதற்கு நடிகை காஜல் அகர்வால்தான் முழு காரணம். இந்த யோசனையை கொடுத்து எங்களை ஊக்கப்படுத்தியதற்காக அவருக்கு நன்றி,


” என விஷ்ணு மஞ்சு தெரிவித்துள்ளார். விஷ்ணு மஞ்சுவின் மனைவிக்கு இது எதோ முதல் பிரசவம் என்று நினைத்துவிடாதீர்கள். எற்கனவே, அவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளன.  இந்நிலையில், 4வது குழந்தை பிறப்பதை வித்தியாசப்படுத்துவதற்காக,  இந்த திட்டத்தை அவர்கள் மேற்கொள்ள முன் வந்துள்ளனர்.

இதுபற்றி அவரது மனைவி விரானிகா கூறுகையில்,”என்னை பலவிதங்களில் செல்லமாக சீண்டும் விஷ்ணு, ஒருபோதும் என்னை கைவிட்டதில்லை. என்னை மிகுந்த அக்கறையுடன் பார்த்துக் கொள்கிறார்.

என் மீது இப்படியான  அன்பு செலுத்த அவரால் மட்டுமே முடியும். அவர் காட்டும் அக்கறைக்கு முன்னால் எனது வலி ஒன்றும் பெரியதில்லை,” என பெருமையுடன் கூறுகிறார்.

Leave a Reply

Your email address will not be published.