துருக்கி நாட்டைச் சேர்ந்த ஒருவர், 37 ஆண்டுகளுக்கு முன் காயம்பட்டுக் கிடந்த அன்னப்பறவை ஒன்றை மீட்டு வீட்டுக்கு கொண்டுவந்தார். அதை அப்படியே விட்டுவிட்டால், நரிகள் அதை கொன்றுவிடக்கூடும் என்பதால், அதை வீட்டுக்கு கொண்டு வந்து அதன் முறிந்த இறக்கைகளுக்கு சிகிச்சையளித்தார் ரெசெப் மிர்சான் (63). சிகிச்சைக்குப் பின் அந்த அன்னப்பறவை குணமடைந்தாலும், அது மிர்சானை விட்டு செல்லவில்லை. அதற்கு கரிப் என்று பெயரிட்டு, தானே வளர்க்க ஆரம்பித்தார் மிர்சான்.
மிர்சான் அந்த அன்னப்பறவையை மீட்டு 37 ஆண்டுகள் ஆன நிலையிலும், அது அவரை விட்டு பிரியவில்லை. பொதுவாக அன்னப்பறவைகள் பல்வேறு காரணங்களால் 12 ஆண்டுகள் வரைதான் உயிர்வாழும். பாதுகாத்து வைத்தாலும் அதிகபட்சம் 30 ஆண்டுகள் வரைதான் அவை வாழும். ஆனால், கரிப் காப்பாற்றப்பட்டே 37 ஆண்டுகள் ஆகிவிட்டது, ஆக, அது ஒரு அபூர்வ அன்னப்பறவை! மிர்சான் தனது பண்ணையில் வேலை செய்யும்போது, அவருடனேயே இருக்கிறது கரிப்.
சொல்லப்போனால், மனைவியை இழந்த மிர்சான் மாலை நேரங்களில் வாக்கிங் செல்லும்போதும் அவருடனேயே நடந்துசெல்லும் கரிப்பை இன்னமும் ஆ ச் ச ரி யத்துடன் பார்க்கிறார்கள் மக்கள். பறந்து செல்ல வாய்ப்பு கிடைத்தும் செல்லாமல் தன்னுடனேயே இருக்கும் கரிப்பை தன் சொந்த மகளாகவே பார்க்கிறார் மிர்சான்.