இன்று தொடங்கும் புதன்பெயர்ச்சி… சிக்கலில் மாட்டிக்கொள்ளும் 6 ராசிகள்!… தப்பிக்க என்ன செய்யலாம்?

எங்கயோ வானத்தில் இருக்கும் கிரக நிலை எப்படி நம் வாழ்க்கையை பாதிக்கும் என்பது இன்றளவும் ஆச்சர்யமாகவே இருக்கிறது. ஆனால் ஜோதிட கூற்றுப்படி பார்த்தால் அந்த மாற்றங்கள் நம் வாழ்விலும் நடக்கத்தான் செய்கிறது. ஏழரைச் சனியிலிருந்து, ராகு கேது பெயர்ச்சி வரை ஜோதிட கணிப்பும் முன்கூட்டியே நம் ராசிக்கான அனுகூலங்களை சரியாக சொல்லத் தான் வருகிறது. அந்த வகையில் இந்த வருடம் மார்ச் 5-28 ஆம் தேதியில் ஏற்படும் புதன் பெயர்ச்சி எந்தெந்த ராசிக்காரர்களுக்கு விளைவை ஏற்படுத்த போகிறது. பாதிப்பை சந்திக்க போகும் அந்த 6 ராசிக்காரர்கள் யார் யார் என்று இங்கே காண்போம்.

மிதுனம்
உங்கள் ஆளும் கிரகமே புதன் தான். அப்படி என்றால் புதனின் பார்வை இந்த வருடம் உங்களுக்கு எப்படி இருக்கும்? மற்றவர்களுடன் ஏற்படும் தொடர்பில் இடையூறு ஏற்படலாம். மக்கள் தொடர்பு தான் உங்கள் பலம் ஆனால் தற்போது அதில் பாதிப்பு வரக் கூடும். எனவே உங்கள் நாவையும் பேச்சையும் கவனமாக பயன்படுத்துவது நல்லது. இல்லையென்றால் வீண் சண்டைகள், எதிரிகள் உருவாக வாய்ப்புள்ளது. புதன் பார்வை அகலும் வரை பேச்சை குறைத்து கொள்ளுங்கள்.

கடகம்
இதுவரை அமைதியாக இருந்த கடக ராசிக்காரர்களால் இனி அமைதியாக இருக்க முடியாது. அதிக கோபம், உணர்ச்சி வசப்படுதல் போன்றவை தென்படும். எந்த காரணமும் இல்லாமல் கோபம் தலைக்கேறும். எனவே பேசுவதற்கு முன் பொறுமையாக இருந்து செயல்படுங்கள்.

சிம்மம்
ஒரு அறையில் இருந்தால் கூட சிம்ம ராசிக்காரர்கள் எப்பொழுதும் உற்சாகமாகவும், மகிழ்ச்சியுடன் கொண்டாடுவார்கள். ஆனால் இந்த மார்ச் மாதம் உங்களுக்கு அப்படி அமையாது. எனர்ஜி குறைந்து காணப்படுவீர்கள். சோம்பேறித்தனம், விருப்பமின்மை எல்லாம் தொற்றிக் கொள்ளும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்கள் எப்பொழுதும் குழப்பமான பேர்வழிகள். இந்த வருடமும் அதிக குழப்பத்தில் இருப்பீர்கள். எனவே அதிகம் யோசிக்க வேண்டாம். முடிந்ததை பற்றி யோசிக்காமல் பொறுமையாக இருங்கள். சிக்கல்கள் சீக்கிரம் சரியாகி விடும்.

துலாம்
தங்கள் மனதில் உள்ளதை யாரும் அறியாமல் மறைப்பதில் வல்லவர்கள் துலாம் ராசிக்காரர்கள். ஆனால் அதே நேரத்தில் உங்களுக்குள் திறமை முழுவதையும் வெளிக்கொணர முயற்சி செய்யுங்கள். கூலாக எதையும் டீல் பண்ணுங்க. மற்றவர்களை வார்த்தைகளால் காயப்படுத்த வேண்டாம்.

கும்பம்
இந்த புதன் பார்வையால் தேவையற்ற விரக்தி உங்களை தாக்கும். வித்தியாசமான பார்வை முயற்சியை கையாளுங்கள். நேர்மறையாக யோசிப்பது உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். மோசமான விளைவை தள்ளி வைக்கும்.

Leave a Reply

Your email address will not be published.