32 மாணவிகளை கதற கதற கற்பழித்த இளைஞர்கள்! மலைக்குகைக்குள் வைத்து அரங்கேறிய கொடூரம்!

ஆந்திராவில், 32 மாணவிகளை இளைஞர்கள் கூட்டம் ஒன்று கதற கதற ரேப் செய்துள்ளது. அம்மாநிலத்தின் கோதாவரி மாவட்டத்தில் உள்ள பவுத்ராம குகைக்கோயிலுக்கு எப்போதும் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதும். குறிப்பாக, காதல் ஜோடிகள்தான் இங்கு அதிகளவில் வருவார்கள். அங்கே ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாததால், தனிமையை விரும்பி வரும் ஜோடிகள், உல்லாசமாக இருப்பதும் வழக்கம். காதல் ஜோடிகள் தவிர, பொதுமக்கள் கூட்டம் அங்கே பெரிய அளவில் இருக்காது. இந்நிலையில், இப்படிப்பட்ட குகைக்கு சமீபத்தில் நவீன் – ஸ்ரீ என்ற இளம் காதல் ஜோடி வந்துள்ளது.

அவர்களை மர்ம கும்பல் ஒன்று சுற்றி வளைத்துள்ளது. நவீனை அடித்துப் போட்டுவிட்டு, ஸ்ரீயை கதற கதற கற்பழித்து, கொலை செய்துவிட்டு தப்பியோடினர். இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன. இதன்படி, பொட்லூரி என்பவனை போலீசார் கைது செய்தனர்.

அவனை விசாரித்ததில், சோமய்யா, கங்கய்யா, நாகராஜூ ஆகியோருடன் சேர்ந்து, இதுவரை 32 பெண்களை ரேப் செய்துள்ளதாகக் கூறியுள்ளான். மேலும், 3 ஆண்கள், ஒரு பெண்ணை கொடூரமாகக் கொன்றும் உள்ளதாக, அவன் தெரிவித்துள்ளான்.

இவர்கள் அனைவருமே 20 வயதுகூட நிரம்பாத இளைஞர்கள் என்பதால், பாதிக்கப்பட்டவர்கள் யார் யார் என்ற விவரம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.