நீண்ட காத்திருப்புக்கு பிறகு நடிகர் பிருத்விராஜ் தனது கட்டாய 14 நாள் தனிமைப்படுத்தலை முடித்த பின்னர் தனது குடும்பத்தினருடன் மீண்டும் இணைந்தார். இந்த செய்தியைப் பகிர்ந்த பிருத்வி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மனைவி சுப்ரியா மற்றும் குழந்தை ஆலங்கிருதா ஆகியோருடன் இருக்கும் ஒரு படத்தை வெளியிட்டுள்ளார்.

ரசிகர்கள் இந்த செய்தியைக் கொண்டாடுகையில், துல்கர் சல்மான், டோவினோ தாமஸ் உள்ளிட்ட பல பிரபலங்களும் அவர்களது கருத்துக்களை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளனர். பிருத்விராஜ் ஜோர்டானிலிருந்து மே 22 அன்று கிட்டத்தட்ட 3 மாதங்களுக்குப் பிறகு நாடு திரும்பினார்.ஜோர்டானில் இந்த படத்தின் படப்பிடிப்பில் நடிகரும் அவரது ‘ஆடுஜீவிதம்’ குழுவும் கொரோனா வைரஸ் காரணமாக உலகளாவிய ஊரடங்கில் மாட்டிக்கொண்டனர்.
கேரளாவிக்கு திரும்பியபோது, நடிகர் கொச்சியில் உள்ள ஒரு ரிசார்ட்டில் 7 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். இந்த காலகட்டத்தில், பிருத்விராஜ் இரண்டு முறை COVID-19 சோதனையை எடுத்து இரண்டு முறை பாதிப்பு இல்லை என்பதை உறுதி செய்தார். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு தனது குடும்பத்துடன் இணைந்துள்ளார்.