3 மாதங்களில் 90 லிட்டர் தாய்ப் பால் தானம் செய்து பல குழந்தைகளின் உயிரை காத்த இளம் தாய்..! குவியும் பாராட்டுக்கள் !

குஜராத் மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவரின் செயல் அனைவரையும் வியப்பிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தியுள்ளது.. மர்ஃபதியா என்ற பெண் கடந்த 3 மாதங்களில், தீவிர சிகிச்சைப்பிரிவில் உயிருக்குப் போராடும் ஐந்து குழந்தைகளைக் காப்பாற்ற தனது பாலை நன்கொடையாக வழங்கி உதவியுள்ளார். இந்தக் குழந்தைகளின் தாய்மார்களுக்கு உடல்நிலை பாதிப்பு இருந்ததால், குழந்தைகளுக்குப் பாலூட்ட முடியவில்லை. எனவே மர்ஃபதியா தானமாக அளித்த தாய்ப்பால் குழந்தைகளின் உயிர்களைக் காப்பாற்றி உள்ளது.

இதுகுறித்து மர்பதியா தெரிவிக்கையில் எனது குழந்தைக்கு தேவையான அளவை விட அதிக அளவில் எனக்கு பால் சுரந்தது. எனவே நோய்வாய்ப்பட்ட அல்லது தேவைப்படும் குழந்தைக்குப் பால் தானம் செய்யலாம் என முடிவு செய்தேன். மருத்துவமனைகள் மூலம் தாய்ப்பால் வங்கி இருப்பதை தெரிந்து கொண்டேன். பின்னர் என் மகனுக்குக் கொடுத்த பால் போக அதிகமாகச் சுரக்கும் பாலைத் தானம் செய்து வருகிறேன்.

3 மாதங்களில் 12 லிட்டர் தானம் செய்துள்ளேன் என்றானர். இந்தத் தாய்ப்பால் வங்கி மூலம் 250 தாய்மார்கள் தங்கள் தாய்ப்பாலை. இதுவரை 90 லிட்டர் தாய்ப்பால் தானமாக பெறப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகமும் தெரிவித்துள்ளது. இவர்களின்  செயலை இந்த கருணைமிக்க செயல் அணைத்து தரப்பு மக்களிடமும் சேர்ந்தது மட்டும் இன்றி நல்ல பாராட்டுகளையும் பெற்று தந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.