3ம் வகுப்பில் இருந்தே அந்த பெண்ணை ரொம்ப பிடிக்கும்..யார் அந்த பெண் தெரியுமா? பிரபல இசையமைப்பாளர் பகீர் பதில்..!

இசையமைப்பாளர் இளையராஜாவின் 75வது பிறந்தநாளையட்டி அவருக்கு தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் பிரமாண்ட பாராட்டு விழாவும், அவரது இசை நிகழ்ச்சியும் நேற்றும், இன்றும், சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நேற்றைய தினம் இளையராஜாவின் இசையில் ஆடி, பாடி நடித்த பல திரைபிரபலங்கள் கலந்து கொண்டு திரையுலகில் ராஜாவுடன் கை கோர்த்து சென்ற இசை பயணம் குறித்து பகிர்ந்து கொண்டனர். மேலும் சிலர் ராஜாவிடம் தங்கள் மனதில் உள்ள கேள்விகளையும் அவர் முன் வைத்தனர்.

அந்த வகையில்நடிகை ராதா மற்றும் கார்த்திக்கை தமிழ் திரையுலகிற்கு அறிமுக படுத்திய முதல் திரைப்படமான ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்திற்கு இசையமைத்திருந்தவர் இளையராஜா தான். மேலும் கார்த்தி, மற்றும் ராதா நடித்த பல வெற்றி படங்களுக்கு இசையமைத்துள்ளார். இதனை பகிர்ந்து கொள்ளும் விதமாக இளையராஜாவை பற்றி ஒரு சில வார்த்தைகளை இருவரும் மேடைக்கு வந்து பகிர்ந்து கொண்டனர்.


அப்போது நடிகை ராதா, தன்னுடைய மனதில் உள்ள ஒரு சந்தேகத்தை இளையராஜா முன் வைத்தார். அதாவது… ” ராஜா சார் நீங்க பல படங்களுக்கு இசையமைத்திருக்கிறீர்கள், நீங்கள் சில நடிகைகளுக்கு இசையமைத்த பாடல்கள் அவர்களுக்காகவே எழுதியது போல இருக்கும். நீங்கள் ஏதாவது ஒரு நடிகையை மிகவும் ரசித்தது உண்டா”. என கேள்வியை முன்வைத்தார்.

இதற்கு இளையராஜா… ஒரு பெண்ணை மட்டும் இப்போது மட்டும் அல்ல மூன்றாம் வகுப்பு படிக்கும்போதில் இருந்தே மிகவும் பிடிக்கும். அவர் பெயர் லைலா. மஜ்னுவை விட அந்த கற்பனை பெண்ணை அதிகம் நேசித்துள்ளதாக கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.