28 ஆண்டுகளுக்கு பின் தற்காலிகமாக கிடைத்த நிம்மதி இது..! இன்றைய இணையத்தின் ட்ரெண்டே இந்த புகைப்படம் தான்..!! அப்படி என்ன ஸ்பெஷல்? நீங்களே பாருங்க

பாசமும் அன்பும் தான் எங்கள் குடும்பத்து சொத்து என பேரறிவாளன் தாய் அற்புதம்மாள் இணையத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது. முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவகாந்தி கொலை வழங்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் பேரறிவாளன், முருகன் மற்றும் நளினி உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வலியுறுத்தி தமிழக மக்கள் அனைவரும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுதொடர்பாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக அமைச்சரவை கூடி தீர்மானம் ஒன்றினை நிறைவேற்றி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திற்கு அனுப்பி வைத்தது.

பாசமும் அன்புந்தான் எங்க குடும்ப சொத்து. 28 ஆண்டு போராட்டத்தில இழந்த மகிழ்ச்சி தற்காலிகமா கிடைச்ச நேரம் இது. நிரந்தர நிம்மதி ஆளுநரின் ஒற்றை கையெழுத்தில நிக்குது. இன்னைக்கு கெடைக்குமா அந்த நிம்மதி? ஆனால் 5 மாதங்கள் கடந்தும் கூட ஆளுனர் அதில் கையெழுத்திடாமல் காலம் தாழ்த்தி வருகிறார்.

இந்த நிலையில் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தன்னுடைய குடும்ப புகைப்படம் ஒன்றினை இணையத்தில் பதிவிட்டு, “பாசமும் அன்பும் தான் எங்க குடும்ப சொத்து. 28 ஆண்டு போராட்டத்தில இழந்த மகிழ்ச்சி தற்காலிகமா கிடைச்ச நேரம் இது.

நிரந்தர நிம்மதி ஆளுநரின் ஒற்றை கையெழுத்தில நிக்குது. இன்னைக்கு கெடைக்குமா அந்த நிம்மதி?” என பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷ் துவங்கி இணையதளவாசிகள் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.