24 வயது இளம்பெண்ணிற்கு 54 வயது முதியவருடன் ஏற்பட்ட கள்ளத்தொடர்பு..!! தகாத உறவால் ஏற்பட்ட விபரீதம்..!!

சேலம் மாவட்டத்தை சேர்ந்த, பாண்டியராஜன் என்பவருக்கு சொந்தமான ஐஸ் கிரீம் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த 7 மாதங்களாக, அதே பகுதியை சேர்ந்த திருமணமாகி விவாகரத்தான 25 வயதான சித்தாரா என்ற பெண், வேலை செய்து வந்தார். இவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இவருக்கும் இனாமுல்லாஹ் என்ற 54 வயது முதியவருக்கும் இடையே கடந்த 4 வருடங்களாக நெருக்கமான பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த இரண்டு பேரின் வீட்டாரும் கடந்த மாதம் ஜமாத்தில் வைத்து தவறான தொடர்பை முறித்துக் கொள்ளும் படி பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர்.

இதன் பின்னர் முதியவருடன் பேசி பழகுவதை, இளம் பெண் சித்தாரா குறைத்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இன்று சித்தாரா வேலை செய்யும் ஐஸ் கிரீம் கடைக்கு முதியவர் இனாமுல்லாஹ் சென்று இருக்கிறார். அப்போது சித்தாரா பேச மறுத்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றவே மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, சித்தாராவின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார் இனாமுல்லாஹ்.

அதன் பின்னர் அவரும் அதே கடையில் கயிறு மூலம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு இருக்கிறார். கடைக்கு ஐஸ் கிரீம் வாங்க வந்த சிலர், இரு சடலங்களையும் கண்டு அதிர்ச்சி அடைந்து, சூரமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அங்கு சென்ற போலீசார் இரு சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைகாக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இனாமுல்லாஹ் கைப்பட எழுதிய 11 பக்க கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.