23 வயதில் 55 வயது நபரை மணந்த இளம் பெண்! இன்று எப்படி இருக்கிறார் தெரியுமா? ஆச்சரிய தகவல்

அமெரிக்காவை சேர்ந்த தம்பதி கேரி(44)-அலன்(76). இவர்கள் இருவரும் 22 ஆண்டுகளுக்கு முன்பு சந்தித்து, அதன் பின் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் தற்போது தங்களின் 17-ஆம் ஆண்டு திருமண வாழ்க்கையில் காலடி எடுத்து வைக்கின்றனர். இவ்வளவு அதிக வயது இடைவெளி இருந்தும், 17 ஆண்டுகள் எப்படி ஒன்றாக வாழ முடிந்தது? என்பது குறித்து இந்த தம்பதியினர் கூறியுள்ளனர்.

இவர்கள் இருவரும் சந்தித்து கொண்ட போது, கேரி 23 வயதாக இருந்தார். அலன்-னின் வாடிக்கையாளருக்காக கேரி வேலை செய்து வந்ததால், இருவரும் அது குறித்து தொடர்ந்து தொலைப் பேசியில் பேசி வந்துள்ளனர். இதுவே இருவருக்கும் ஒரு வித புரிதலை கொடுத்துள்ளது. இதனாலே அவரை சந்திக்க வேண்டும் என்ற ஆவல் எனக்குள் இருந்தது. அப்படி ஒரு சூழ்நிலையில் தான், கேரி-ஐ அலன் மதிய உணவிற்கு ஒரு முறை அழைத்துள்ளார். 1998-ல் சந்தித்து கொண்ட இந்த ஜோடி, அதன் பின் 2003-ஆம் ஆண்டு திருமணம் செய்ய முடிவு செய்தனர். அலன்-க்கு முதல் திருமணம் காரணமாக இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்கள் இருவருமே கேரி-ஐ விட அதிக வயதானவர்கள். கேரி தன்னுடைய காதல் குறித்து அவர் அம்மாவிடம் கூறிய போது பயந்துள்ளார். ஏனெனில் அலன் இவரை தேவைக்கு பயன்படுத்திவிட்டு சென்றுவிடலாம் என்று கவலைப்பட்டுள்ளார். இருப்பினும், அவரின் மற்ற குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் பெரும்பாலோர் அலன்-ஐ ஏற்றுக்கொண்டனர்.

ஒரு வயது இடைவெளி உள்ள உறவு பல நன்மைகளை கொடுக்கும் என்று கேரி கூறினார். ஒருவருக்கு ஒருவர் நேசிக்கிறோம், எந்த பிரச்சனை வந்தாலும், இருவரும் சேர்ந்து செயல்பட விரும்புகிறோம். வயதான துணையின் முதிர்ச்சி இளையவருக்கு உறுதியை அளிக்கிறது என்று தெரிவித்தார். தற்போது இருக்கும் காலத்தில் திருமணம் ஆன சில ஆண்டுகளிலே விவாகரத்து என்று நீதிமன்றத்தில் போய் நிற்கும் பலருக்கு முன்னால், இந்த தம்பதி 17 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்துள்ளனர் என்பது ஆச்சரியமாக இருந்தாலும், அவர்களின் அன்பு, பொறுமையே, விட்டுக் கொடுத்து போவதே காரணம் என்று கூறுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!