23 கிலோ உடல் எடையை குறைத்த “பாண்டவர் இல்லம்” சீரியல் நடிகை கிருத்திகா.. ரசிகர்கள் ஷா க்.. நீங்களே பாருங்க..

சின்னத்திரை நடிகை கிருத்திகா, இவர் 2005 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான “மெட்டி ஒலி ” என்ற சீரியல் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் சீரியல் கண்மணி” , “வம்சம்” , “செல்லமே” போன்ற பல சின்னத்திரை தொடர்களில் வில்லியாக நடித்து அசத்தியுள்ளார்.சின்னத்திரை சீரியல்களை தவிர்த்து இவர் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “மானாட மயிலாட” என்ற நடன நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார்.பார்ப்பதற்கு நல்ல உயரத்துடன், திடகாத்திரமாக இருப்பதால் இவருக்கு பெரும்பாலும் சீரியல்களில் வில்லி கதாபாத்திரமாகவே அமைகிறது.

மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த “சின்னத்தம்பி” என்ற சீரியலில் ஒளிபரப்பாகி, அந்த தொடரிலும் வில்லலியாக நடித்து அசத்தி வந்த இவர் சில வருடங்களுக்கு முன்னர் அருண் சாய் என்ற நபரை திருமணம் செய்து கொண்டார். 15 வயதில் இருந்து தற்போது வரை, சின்னத்திரையில் தொடர்ந்து நடித்து கொண்டிருக்கும் நடிகை கிருத்திகா.இவர் 10ஆம் வகுப்பு படிக்கும்போதே சன் டிவியின் பிரபல சீரியலான, மெட்டி ஒலியில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.

அதைத்தொடர்ந்து ஆனந்தம், செல்லமே, முந்தானை முடிச்சு உள்ளிட்ட சூப்பர் ஹிட் சீரியல்களில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்தார்.மேலும், தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டவர் இல்லம் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், 86 கிலோவிலிருந்து தன்னுடைய உடல் எடையை 63 கிலோவாக குறைத்து, ஸ்லிம்மாக மாறி உள்ளார். 2012-ல் இருந்து 2021 வரை தனது உடல் எடை குறைந்தது குறித்து, வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் கிருத்திகா.இதோ அந்த வீடியோ..