21 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சினிமாவிற்கு ரீஎன்ட்ரி கொடுக்கும் ஷாலினி! அஜித் போட்ட ஒரே கண்டிஷன்

தமிழ் சினிமாவின் தல என்று கொண்டாடப்படும் நடிகர் அஜித். இவர் நடிப்பில் கடந்த வருடம் விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை ஆகிய படங்கள் வந்தது. இந்த இரண்டு படங்களுமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இவரின் படம் வந்தாலே தியேட்டரே திருவிழா கோலமாகும். இதை தொடர்ந்து அஜித் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை எச். வினோத் இயக்கிவர, போனி கபூர் தயாரித்து வருகிறார். அஜித் தன்னுடன் நடித்த நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, முன்னணி நடிகையாக மாறியவர் தான் நடிகை ஷாலினி அஜித்குமார். அதன்பின்னர் விஜய் நடிப்பில் காதலுக்கு மரியாதை படத்திம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதனைத்தொடர்ந்து, தற்போது ஷாலினி 21 ஆண்டுகளுக்குப் பிறகு, மணிரத்னம் இயக்கி கொண்டிருக்கும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் கேமியோ ரோலில் நடிக்கவுள்ளாராம்.

இந்தத் தகவல் தற்போது இணையத்தில் பரவி வருகிறது. அதுமட்டுமின்றி, இந்த செய்தியை தல ரசிகர்கள் வெறித்தனமாக கொண்டாடுவதோடு, ஷாலினியை வெள்ளித்திரைக்கு வரவேற்று கொண்டிருக்கிறாராம். மணிரத்தினம் இயக்கம் என்பதால் மட்டுமே தல அஜித் இந்த படத்தில் நடிப்பதற்கு ஒப்புதல் கொடுத்துள்ளாராம்.

Leave a Reply

Your email address will not be published.