2019- இந்த 3 ராசிக்காரர்களுக்கும் எங்கயோ மச்சம் இருக்குப்பா! இல்லாட்டி இதெல்லாம் நடக்குமா? உங்களில் யார் அந்த அதிர்ஷ்டசாலி?

ஒருவர் ஜாலியாக இருப்பதற்கும் அவர்களுடைய ராசிக்கும் கிரகங்களுக்கும் நிறைய சம்மந்தம் இருக்கிறது. சிலருக்கு அன்றைக்கு நடக்கும் எல்லா செயல்களுக்கும் தன்னுடைய ராசியும் தான் அணிந்திருக்கும் உடையும் தான் காரணம் என எளிதாக நிம்மதியுடன் அன்றைய நாளை கடந்து சென்று விடுவார்கள்.சிலரோ இன்றைய நாள் சிறப்பாக இல்லாததற்கு, நாம் காலையில் ராசிபலனைப் பார்த்து அதன்படி நடந்து கொள்ளாததுதான் காரணமோ என்று கூட நினைக்கலாம்.

அப்படி மக்களின் மனதில் ஆழப்பதிந்த ஒரு விஷயம்தான் ஜோதிடம். அப்படி இன்றைக்கு என்னென்ன ராசிக்கு என்னென்ன பலன்கள் உண்டாகும் எனப் பார்ப்போம். அந்த ஜோதிடத்தின் மூலம் நாம் வாழ்க்கையில் யாரை நம்பலாம், யாரை நம்பக்கூடாது என்பது வரை மிகத் தெளிவாக ஜோதிடத்தில் நம்மால் அறிந்து கொள்ள முடியும்.12 ராசிகளும் ஐம்பூதங்களின் தன்மைக்கு ஏற்ப ஆகாயத்தைத் தவிர, நிலம், நீர், காற்று, நெருப்பு ஆகிய நான்கு வகைக்கும் மூன்று மூன்றாகப் பிரிக்கப்படுகிறது.

அந்த இயற் பொருள்களின் தன்மைக்கேற்பவும் கோள்களின் இயக்கங்களுக்கு ஏற்பவும் பலன்கள் கணிக்கப்படுகின்றன. அந்த கோள்களின் இயக்கங்களுக்கு ஏற்ப இயற்கையின் செயல்பாடுகள் மாறும். அதை அடிப்படையாக வைத்து கணிக்கப்படுவது தான் ஜோதிடம்.

இது நம்முடைய முன்னோர்களின் வானியல் அறிவுக்கு ஓர் சிறந்த எடுத்துக்காட்டு. அதனால் எந்த விஷயத்திலும் நம்பிக்கையோடு செயல்பட்டால் வெற்றி நமக்கு நிச்சயம் தான்.நம்பிக்கை இல்லையென்றால் அதைப்பற்றி சிந்தித்து நம்முடைய நேரத்தைக் கடத்தக்கூடாது. ஒரு விஷயத்தின் மீதான நம்பிக்கைத்தன்மை அந்த விஷயத்தின் முழுமையை நமக்குப் புரிய வைக்கும்.

மேஷம்

குடும்பத்தில் உள்ளவர்களின் ஆரோக்கிய விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும். பொருள் சேர்க்கை உண்டாகும். புதிதாக வேலை தேடுகிறவர்களுக்கு சுப செய்திகள் வந்து சேரும். எந்த செயலைச் செய்தாலும் அதில் கொஞ்சம் நிதானமாக இருப்பது நல்லது. உங்களுடைய நீண்ட நாள் ஆசை இன்று நிறைவேறும்.

ரிஷபம்

குடும்ப உறுப்பினர்களுடைய எண்ணங்களை அறிந்து செயல்படுவது நல்லது. புதிய தொழிலுக்கு பிரபலங்களுடைய ஆதரவுகள் கிடைக்கும். வாகனப் பயணங்களால் லாபங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணியில் நிறைய முன்னேற்றங்கள் ஏற்படும்.

மிதுனம்

உங்களுடைய முன்னோர்கள் செய்த அறச் செயல்களால் உங்களுடைய வாழ்க்கையில் மேன்மையான சூழல்கள் உண்டாகும். பெரிய பெரிய நிறுவனங்களிடம் இருந்து கௌரவப் பதவிகள் உங்களைத் தேடி வரும். மனதில் கவலைகள் அதிகரிக்கும். பெரியோர்களுடைய ஆசிர்வாதங்கள் கிடைக்கும். சக ஊழியர்களுடைய ஒத்துழைப்புகள் உங்களுக்குக் கிடைக்கும்.

கடகம்

நண்பர்களுடைய ஒத்துழைப்பால் தொழிலில் லாபம் உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் சாதகமற்ற சூழல் உண்டாகும். அரசாங்கத்திடம் இருந்து எதிர்பார்த்த அனுகூலமான செயல்கள் நடைபெறும். வழக்குகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்க கொஞ்சம் கால தாமதமாகலாம். மனதில் இருந்த குழப்பத்தால் வேலையில் கொஞ்சம் மந்ததத் தன்மை இருக்கும்.

சிம்மம்

கணவன்,மனைவிக்குள்ளாக கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். கடல் வழிப் பயணங்களால் அனுகூலமான செய்திகள் கிடைக்கும். தந்தைக்கும் மகனுக்கும் இடையே உறவுகள் மேம்படும். தலைமைப் பதவி கிடைப்பதற்கான சாதகமான சூழல்கள் உண்டாகும். புண்ணிய காரியங்கள் செய்து அதன்மூலம் புகழ் அடைவீர்கள். பயணங்களால் நல்ல பலன்கள் கிடைக்கும்.

கன்னி

திடீரென உண்டாகும் யோகத்தால் பண வரவு அதிகரிக்கும். நண்பர்களுடைய ஆதரவினால் மேன்மையான சூழல்கள் உருவாகும். யாருக்கேனும் வாக்குறுதிகள் கொடுக்கும்போது அதில் கவனமாக இருக்க வேண்டும். உடல் நலத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கி நலம் உண்டாகும். கூட்டுத் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.

துலாம்

நண்பர்களுடைய உதவியினால் நினைத்த காரியங்கள் நிறைவேறும். தொழிலில் முன்னேற்றம் அடைவதற்கான நுட்பமான பணிகளை மேற்கொள்வீர்கள். எதிர்பார்த்த உதவிகளின் மூலம் தொழிலில் முதலீடுகள் அதிகரிக்கும். உயர் பதவிகளுக்கான வாய்ப்புகள் அமையும். மனைவியிடம் கொஞ்சம் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.

விருச்சிகம்

பரம்பரை சொத்துக்களால் தேவையில்லாத விரயச் செலவுகள் ஏற்படும். பணியில் உள்ளவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும் நாளாக இன்று இருக்கும். புதிய வீடு மற்றும் மனை வாங்குவதற்கான எண்ணங்கள் அதிகரிக்கும். தொழில் சார்ந்த முயற்சிகளில் காரிய விருத்திகள் உண்டாகும். உங்களுடைய சிந்தனையின் போக்கில் மாற்றங்கள் உண்டாகும். வங்கிகளில் எதிர்பார்த்து காத்திருந்த கடன்கள் கைக்கு கிடைக்கும். வீண் அலைச்சல்கள் உண்டாகும் நாளாக இன்று அமையும்.

தனுசு

கணவன் மனைவிக்கு இடையே புரிதல்கள் அதிகரிக்கும். பொருள் சேர்க்கையினால் மனம் மகிழ்ச்சி அடையும். பணியில் இருக்கும் உத்தியோகஸ்தர்களுக்க சாதகமான சூழல்கள் ஏற்படும். புதுப்புது முயற்சிகளில் நீங்கள் எதிர்பார்த்து காத்திருந்த வெற்றி கிடைக்கும். உங்களுடைய பொருள்கள், உடைமைகளில் கவனமாக இருங்கள். உயர் அதிகாரிகளிடம் பாராட்டுக்களைப் பெறுவீர்கள்.

மகரம்

விவாதங்களில் நீங்கள் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். தைரியத்துடன் புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். ஆபரணச் சேர்க்கைகள் உண்டாகும். கால்நடைகளால் எதிர்பார்த்ததை விடவும் அதிக லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். அடுத்தவர் மீதான விமர்சனங்களளைக் குறைப்பது நல்லது. புதிய நட்புகளின் அறிமுகங்கள் கிடைக்கும்.

கும்பம்

உங்களுடைய வேலைகளை யாரையும் எதிர்பார்க்காமல் நீங்களே செய்து கொள்வது சிறப்பு. பொது நலத்திற்காக நன்கொடைகள் கொடுக்க முன் வருவீர்கள். உயரமான இடங்களில் கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது. தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும். பேச்சில் கவனம் தேவை. நண்பர்களுடன் கலந்து பேசி, மகிழ்ச்சி அடைவீர்கள். உறவினர்களுடைய வீட்டு விசேஷங்களில் கலந்து கொண்டு, மகிழ்ச்சி அடைவீர்கள்.

மீனம்

சுய தொழில் செய்பவர்களுக்கு செய்யும் தொழிலில் மேன்மை உண்டாகும். உடன் பிறந்த மூத்த சகோதர சகோதரிகளின் மூலமாக அனுகூலமான பலன்கள் உண்டாகும். மனம் புத்துணர்ச்சி அடையும். அரசு தரப்பில் இருந்து எதிர்பார்த்திருநு்த உதவிக்ள வந்து சேரும். தொழிலின் மூலமாக மிகவும் பிரபலமடைவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணியில் நல்ல பெயர் உண்டாகும்.

Leave a Reply

Your email address will not be published.