20 ஆண்டுகள் படுத்தப்படுக்கை.. தனது படத்தின் ஹீரோவைப் பார்த்து கண்ணீர் விட்ட இயக்குனர் பாரதிராஜா..!

பாரதிராஜா இயக்கத்தில் 1990-ம் ஆண்டு வெளியான என் உயிர் தோழன் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் பாபு. அதைத்தொடர்ந்து பெரும் புள்ளி, தாயம்மா, பொண்ணுக்கு சேதி வந்தாச்சு உள்ளிட்ட படங்களில் நடித்த அவர் படப்பிடிப்பில் சண்டைக்காட்சியில் நடிக்கும் போது தவறி விழுந்து முதுகு தண்டுவடத்தில் பலத்த அடிபட்டது. இதையடுத்து திரைத்துறையில் இருந்து ஒதுங்கிய அவர் 20 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

நடிப்பைத் தாண்டி வசனகர்த்தாவாகவும் பணியாற்றிய பாபு 1997-ம் ஆண்டு பிரகாஷ்ராஜ் நடித்த ‘ஸ்மைல் ப்ளீஸ்’ படத்திலும் பணியாற்றியுள்ளார். ஆனால் அத்திரைப்படம் திரைக்கு வரவில்லை. தற்போது வரை மருத்துவமனையில் படுத்த படுகையாக இருந்து சிகிச்சை பெற்று வரும் நடிகர் பாபுவை பாரதிராஜா நேரில் சந்தித்து கண் கலங்கியுள்ளார். இதுகுறித்த வீடியோ ஒன்று சமூகவலைதளத்தில் வெளியாகியுள்ளது.

பாபுவின் முகத்தை உற்று பார்த்தபடியே இருக்கும் பாரதிராஜா ஒருகட்டத்தில் இருக்கையில் அமர்ந்து கண்ணில் பெருக்கெடுத்து வரும் கண்ணீரை இருகைகளால் துடைக்கிறார். பாபுவின் உடல்நலம் விசாரிக்கச் சென்ற பாரதிராஜா அவருக்கு உதவி செய்துவிட்டு திரும்பியதாகவும் கூறப்படுகிறது. தற்போது அவரது மருத்துவ சிகிச்சைக்காக திரைத்துறையினர் உதவ வேண்டும் என்று அவரது நண்பர்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *