2 மகன்களை மயக்கி கொடூரமாக கொலை செய்த தாய்! தானும் தற்கொலை செய்த பரிதாபம்!

கடலூர் அருகே பாதிரிகுப்பத்தை சேர்ந்த மதிவாணன். இவர் மெடிக்கல் ஷாப் நடத்தி வருகிறார் இவருக்கு சிவசங்கரி எனும் மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். 12 வயதான பாவேஷ் கண்ணா, 8 வயதான ரதீஷ் கண்ணாவுடன் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் கடந்த ஓராண்டாகவே கணவன் மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்றும் கணவன் மனைவிக்கு இடையே கடுமையான தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் பொறுமை இழந்த மதிவாணன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். கணவன் வெளியே சென்றுவிட்டதால் நேற்று இரவு சிவசங்கரி தன் இரண்டு மகன்களுடன் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

அப்போது வீட்டில் இருந்த மயக்க மாத்திரைகளை மகன்களுக்கு கொடுத்துள்ளார். இதனால் மகன்கள் இருவரும் மயங்கியுள்ளனர். பின்னர் தனது நெஞ்சை கல்லாக்கிக் கொண்டு இரண்டு மகன்களையும் கொடூரமாக கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார் சிவசங்கரி. ஆசை ஆசையாக வளர்த்த மகன்களை கொலை செய்ததோடு அவர்களுக்கு விட்டு மலர் தூவி ஒப்பாரியும் வைத்துள்ளார் சிவசங்கரி. பின்னர் தன் வீட்டில் தூக்கு மாட்டி சிவசங்கரியும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். பிறகு சிறிது நேரம் கழித்து மதிவாணன் வீட்டிற்கு வந்துள்ளார். மதிவாணன் வீட்டின் கதவை தட்டியுள்ளார். வெகு நேரம் ஆகியும் திறக்காததால் பக்கத்துவீட்டு நபரின் உதவியுடன் ஜன்னல் வழியாக பார்த்துள்ளார்.

அப்போது சிவசங்கரி தூக்குமாட்டி தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளார். அங்கு இரு மகன் தரையில் இறந்த நிலையிலும் உடல்கள் அலங்கரிக்கப்பட்டு இருப்பதை கண்டு கதறி அழுதுள்ளார். முன்னதாக சிவசங்கரி காவல் துறைக்கு மற்றும் உறவினர்களான அம்மா,தங்கை,மாமா விற்கு என 4 கடிதம் தனி தனியாக எழுதி வைத்துள்ளார் இந்த கடித்ததில் தன் கணவர் மதிவாணன் மிகவும் பொருமையானவர் என்று கூறியுள்ளார் மேலும் கணவருக்கு தான் அதிகளவு தொந்தரவு கொடுத்துவிட்டதாகவும் எனவே தான் சாகபோகிறேன் எனவும், தனது சாவுக்கும் தனது மகன்கள் சாவுக்கும் யாரும் கராணமில்லை எனவும் உகடித்தை எழுதிவைத்துள்ளார்.

கணவருக்கு தொந்தரவு கொடுக்கூடாது என்பதால் தன் இரு மகன்களையும் தன்னுடன் அழைத்துச் செல்வதாகவும் கடிதத்தில் சிவசங்கரி கூறியுள்ளார். இது குறித்து திருப்பாதிரிபுலியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இருப்பினும் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சிவசங்கரி உறவினர்கள் கூறியுள்ளனர். எனவே விசாரணை நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!