2 நாட்களில் தங்கைக்கு திருமணம்.. தூக்கில் தொங்கிய அண்ணன்! அதிரவைக்கும் பின்னணி

சேலம் மாவட்டத்தின் ஆத்தூரை சேர்ந்தவர் செல்வராஜ் (29). இவர் மனைவி தீபா (24). ஆழ்துளை கிணறு அமைக்கும் வேலை செய்து வந்த செல்வராஜ், கிணறு அமைக்க ரிக் வண்டியுடன் சென்றால் திரும்பி வருவதற்கு மாதக் கணக்கில் ஆகும் என தெரிகிறது. இந்நிலையில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு தீபாவுக்கு குழந்தை பிறந்துள்ளது. பிரசவத்துக்காக தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றிருந்த தீபா அங்கேயே தனது குழந்தையுடன் வசித்து வந்தார். வருகிற 10-ந் திகதி செல்வராஜின் தங்கை ராஜேஷ்வரிக்கு திருமணம் நடைபெற உள்ளது.

இதையடுத்து, ஆழ்துளை கிணறு அமைக்க சென்ற செல்வராஜ் வீடு திரும்பினார். தங்கையின் திருமணத்தை முன்னிட்டு அவர், தீபாவின் பெற்றோர் வீட்டுக்கு சென்று மனைவி மற்றும் குழந்தையை அழைத்துக்கொண்டு, தனது வீட்டுக்கு வந்தார். இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு செல்வராஜ், தனது மனைவியை ஆசைக்கு இணங்க அழைத்துள்ளார். அதற்கு தீபா மறுத்துள்ளதுடன், வேறு அறைக்கு சென்று தூங்கி விட்டார். இதன் காரணமாக மனைவியின் நடத்தையில், அவருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

மேலும் தங்கையின் திருமண செலவுக்கு பணம் இல்லாமலும் சிரமப்பட்டுள்ளார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து மணப்பெண் ராஜேஷ்வரிக்கு நேற்று நடக்கவிருந்த நலங்கு நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது.

திருமணம் வருகிற 10-ந் திகதி நடைபெறும் என உறவினர்கள் தெரிவித்ததாக பொலிசார் கூறினார்கள். இதோடு செல்வராஜின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கருதும் பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published.