2 தீவிரவாதிகளை திருமணம் செய்து குழந்தை பெற்றெடுத்த 19 வயது மாணவி வாழ்க்கையில் நிகழ்ந்த சோகம்

2015 ஆம் ஆண்டு பிரித்தானியாவில் இருந்து சிரியாவுக்கு சென்று ஐஸ் இயக்கத்தில் இணைந்து தற்போது மீண்டு வந்துள்ள மாணவியின் குடியுரிமை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரியில் படித்து வந்த Shamima Begum என்ற இளம்பெண் ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு பிரித்தானியாவில் இருந்து தப்பித்து பெற்றோருக்கு தெரியாமல் சிரியாவுக்கு சென்று ஐஸ் இயக்கத்தில் இணைந்துள்ளார். அங்கு, ஐஸ் தீவிரவாதி ஒருவரை திருமணம் செய்துகொண்டு இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்தார்.

ஆனால், இரு குழந்தைகளும் உடல்நலக்குறைவால் இறந்துவிட்டனர். முதல் கணவரின் சித்ரவதை காரணமாக அவரிடம் இருந்து பிரிந்து இரண்டாவதாக ஒரு ஐஎஸ் தீவிரவாதியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், கர்ப்பிணியாக இருந்த நிலையில் தற்போது பிரித்தானியாவுக்கு திரும்பி வந்து மூன்றாவதாக குழந்தை பெற்றெடுத்துள்ளார்.

தனது குழந்தைக்காக இனிமேல் வாழப்போவதாக கூறியுள்ள பேகத்தின் குடியுரிமை ரத்து செய்யப்பட்டுள்ளது. பிரித்தானிய உள்துறை அலுவலகத்தில் இருந்து இவருக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில்.

உங்களுடைய குடியுரிமை ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும் உங்களது மகளது குடியுரிமை குறித்து ஆலோசிப்பது குறித்த கோப்புகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.