2 குழநதைக்கு தாயான பிறகும் இப்படியா..? – நடிகை மாளவிகா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து புலம்பும் ரசிகர்கள்..!

அஜித்துடன் உன்னைத்தேடி படத்தில் நடித்து தமிழில் அறிமுகமானவர் மாளவிகா. வாளமீனுக்கும் விலாங்குமீனுக்கும் கல்யாணம்… பாடலில் நடனம் ஆடி பிரபலமானார்.

“ரோஜா வனம்”, “வெற்றி கொடி கட்டு”, “சந்திரமுகி”, “தி ருட்டு பயலே”, “குருவி”, “வியாபாரி”, “சபரி” உள்பட பல முக்கிய படங்களில் நடித்துள்ளார். 10 வருடங்களுக்கு முன்பு சுமேஷ் என்பவரை திருமணம் செய்து சினிமாவை விட்டு விலகினார்.

மாளவிகாவுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். குடும்பத்துடன் மும்பையில் வசித்து வந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழ் படங்களில் நடிக்க தயாராகி உள்ளார். 2 கதைகள் கேட்டுள்ளார்.

இவற்றில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. தமிழில் நல்ல கதைகள் மற்றும் கதாபாத்திரங்களில் நடித்தேன். முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்தேன். ரசிகர்களும் என்மீது அன்பு காட்டினார்கள். வாளமீன் பாடல் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.

திருமணத்துக்கு பிறகு குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தினேன். மீண்டும் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. இப்போது அதற்கான நேரம் வந்துள்ளது. புதிய படங்களில் நடிக்க கதை கேட்டு வருகிறேன். நல்ல கதாபாத்திரங்களில் நடிக்க முடிவு செய்துள்ளேன். என்று கூறுகிறார் மாளவிகா.

மேலும், ரசிகர்கள் தன்னை மறந்து விடமால் இருக்க அவ்வப்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார்கள்.

தற்போது மாலத்தீவுகளுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கே சிரசாசனம் செய்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், அந்த ஃபிட்னஸ்.. இந்த வயசுலயும் இப்படியா..? என வாய் பிளக்கின்றனர்.தற்போது இணையத்தை கலக்கும் அந்த புகைப்படம் இதோ…

Leave a Reply

Your email address will not be published.