18 வயசுல கல்யாணம் ஆச்சு..!! ஆனாலும் விவாகரத்து வாங்கினேன்..!! எவர்கிரீன் நடிகை சுலக்‌ஷனா ஓபன் டாக்..!!

முந்தைய கால படங்களில் மிகவும் ஒரு ஆழ்ந்த கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை சுலக்ஷனா..இவரின் வெகுளித்தனமான குணம், நடிப்புப் பயணத்திலும் பிரதிபலித்திருக்கிறது. நடிகையாகவும் சிங்கிள் பேரன்ட்டாகவும் வெற்றிபெற்ற சுலக்‌ஷனா, தன் வெற்றிப் பயணம் குறித்துப் பேசுகிறார். ஆந்திராவிலுள்ள ராஜமுந்திரி என் சொந்த ஊர். எனக்கு நினைவு தெரியுறதுக்குள்ளேயே சென்னைக்குக் குடியேறிட்டோம். காவியத் தலைவி படத்துல ஒரு சின்னப்பொண்ணு சரியா நடிக்கலை. அங்க ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்திட்டிருந்த என்னை நடிக்கக் கேட்டார் இயக்குநர் கே.பாலசந்தர் சார்.

அந்தப் படத்துல ஜெமினி கணேசன் – செளகார் ஜானகிக்கு மகளா நடிச்சேன். மூணு வயசுல தொடங்கி, தொடர்ந்து குழந்தை நட்சத்திரமா பல மொழிகளிலும் 100 படங்களுக்கு மேல் நடிச்சேன்; தெலுங்கில்தான் அதிகம் நடிச்சேன்.அடுத்து ராஜ்குமார் சாருக்கு ஜோடியா நடிச்ச கன்னடப் படமும் பெரிய ஹிட். பிறகுதான் `தூறல் நின்னு போச்சு’ பட வாய்ப்பு வந்துச்சு. ரெண்டு படங்கள் ஹிட் கொடுத்திருந்தாலும்கூட, புது ஹீரோயின் மாதிரி எனக்கு நிறைய டெஸ்ட் வெச்சாங்க. பிறகுதான், `தூறல் நின்னு போச்சு’, `டார்லிங் டார்லிங் டார்லிங்’ உட்பட மூணு படங்களுக்கு ஹீரோயினா ஒப்பந்தம் போட்டார் பாக்யராஜ் சார்.

ஹீரோயினா புகழுடன் இருந்த 18 வயசுல எனக்குக் கல்யாணம் முடிவாகிடுச்சு. மறைந்த இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் ஐயாவின் மகன் கோபி கிருஷ்ணன் என் முன்னாள் கணவர். திடீர் திருமணம். கல்யாணத்துக்குப் பிறகுதான் எனக்கு சினிமா வாய்ப்புகள் அதிகமா வந்துச்சு. `ஆயிரம் நிலவே வா’, `கெட்டிமேளம்’, `குவா குவா வாத்துகள்’, `ஜனவரி 1′, `ராஜாத்தி ரோஜாக்கிளி’னு நிறைய ஹிட் படங்கள்ல ஹீரோயினா நடிச்சேன். `கே.பாலசந்தர் சாரின் `சிந்து பைரவி’ படத்துக்குப் பிறகுதான் நல்ல ஆர்ட்டிஸ்ட்டுன்னு எனக்குப் பெயர் கிடைச்சது. கருத்து வேறுபாடு காரணமா, என் கல்யாண வாழ்க்கை விவாகரத்தில் முடிஞ்சது. எதிர்பார்ப்பு பொய்த்துப் போய் வாழ்க்கை கஷ்டமானது. அதுக்காக வருத்தப்பட்டாலும், அத்துடன் வாழ்க்கை முடிஞ்சுபோச்சா என்ன? சவாலா இருந்தாலும், சிங்கிள் பேரன்ட் வாழ்க்கையைத் தைரியமா எதிர்கொண்டு வாழ்ந்தேன். இதனால்தான் எனக்கு மன அமைதி கிடைக்குது.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.