பொதுவாக ஆண் மற்றும் பெண் இரு பாலினத்தவரும் எந்த வயதில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வரைமுறை உள்ளது. அது என்ன வென்று அந்த அந்த நாட்டு நீதிமன்றம் அல்லது அவர்களின் கோட்பாடுகள் படி தான் திருமண வயது நிர்ணயிக்க படுகிறது.. 17 வயது சிறுவனை 21 வயது பெண் ஒருவர் திருமணம் செய்து கொண்டதாக தொடரப்பட்ட வழக்கில் அதை குழந்தைத் திருமணமாக கருத முடியாது என்று உச்சநீதிமன்றம் தெளிவுப்படுத்தி உள்ளது. அதே சமயம் அது குற்றம் என கருதி அதற்கு தண்டனை அளிக்க முடியாது என்றும் மேற்கோள்கள் காட்டி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
தன்னை விட சிறிய பையனை திருமணம் செய்ததற்காக அந்த பெண்ணையும், வயது அதிகம் கொண்ட பெண்ணை திருமணம் செய்து கொண்டதற்காக அந்த சிறுவனையும் தண்டிக்க முடியாது என்று நீதிபதி மோகன் சந்தான கவுடர் தலைமையிலான அமர்வு முடிவு செய்துள்ளது.
17வயது சிறுமியை திருமணம் செய்து கொடுத்தால் குழந்தை திருமணம் என ஊரே திரண்டு வந்து புகார் அளித்து குடும்பத்தையே உள்ளே தள்ள முயற்சிக்கிறது. அதற்குக் காரணம் 17 வயதில் ஒரு பெண் மனரீதியாக திருமணத்திற்கு தயாராகி இருக்கமாட்டார் என்பதுதான். அப்படி என்றால் 17 வயது சிறுவன் மட்டும் தயாராகி இருப்பானா என்பது தான் கேள்வி . உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு சற்று யோசிக்க தக்க வகையிலும், மக்களிடத்தில் பல கேள்விகளையும் எழுப்புகிறது என்று தான் சொல்ல வேண்டும்.