16 வயது சிறுமி! 7 மாதம் அடைத்து வைத்து கற்பழிப்பு! 4 பேர் சேர்ந்து செய்த கொடூர செயல்!

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் 16 வயதுச் சிறுமியை 7மாதங்கள் அடைத்து வைத்து கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த 4 நடத்துநர்களை போலீசார் கைது செய்துள்ளனர். உமேஷ் என்ற வர்ஷ்பால், மோரேஷ்வர் மேஷ்ராம், தர்மபால் தாதராவ் மேஷ்ராம், ஆஷிஷ் காஷிராம் லோகாந்தே என்ற அந்த நால்வரும் 22 முதல் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் நாக்பூரின் மங்காபூரைச் சேர்த கூலித் தொழிலாளிகளான தம்பதிகள் தங்கள் மகளைக் காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு சிறுமியைத் தேடி வந்த போலீசார் 7 மாதங்களுக்குப் பின் ராய்ப்பூரில் சிறுமியைக் கண்டுபிடித்து மீட்டு அழைத்துவந்தனர்.

சிறுமியிடம் மேற்கொண்ட விசாரணையில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின. சிறுமி தான் பயின்ற கல்வி நிலையத்துக்கு பேருந்திலேயே சென்று வந்த நிலையில் நடத்துநரான தர்மபால் மேஷ்ராமுடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் தங்கள் தொடர்பு எண்களை பரிமாறிக் கொண்டு பேச்சுகளைத் தொடர்ந்த நிலையில் கடந்த ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி தான் வாடகைக்குப் பிடித்திருந்த வீட்டுக்கு சிறுமியை அழைத்ததாகவும் அங்கு வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து அவன் தன் நண்பர்களையும் அழைக்க அவர்களும் வந்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தனர். அது முதல் கடந்த ஜனவரி 31-ஆம் தேதி வரை 7 மாதங்கள் அவர்கள் அந்தச் சிறுமியை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது

இந்நிலையில் தான் கருவுற்றதாக சந்தேகப்பட்ட அந்தச் சிறுமி, எனினும் தனது குடும்பத்துக்கு அவமானம் நேர்ந்துவிடக் கூடும் எனக் கருதி வீடு திரும்பாமல் இருந்த நிலையில் சிறுமிய போலீசார் மீட்டு அழைத்துவந்தனர். சிறுமியின் புகாரின் பேரில் அந்த நான்கு பேர் மீது பாலியல் பலாத்காரம், போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்துள்ளனர்

Leave a Reply

Your email address will not be published.