16 வயதில் திருமணம்.. 3 பெண் பிள்ளைகளின் தாயான லட்சுமி ராமகிருஷ்ணன் தன்னை தானே செதுக்கிக் கொண்ட கதை…

லட்சுமி ராமகிருஷ்ணன் 1970ஆம் ஆண்டு கேரளாவின் பாலகாட்டில் பிறந்தவர். சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் லட்சுமி ராமகிருஷ்ணன். அவருடைய கணவர் ராமகிருஷ்ணன் ஐஐடி ல் படித்து வெளிநாடுகளில் வேலை செய்து வந்தார். இதனால் தனது 16 வயதில் இருந்து 35 வயது வரை ஓமன் நாட்டில் கணவருடன் வாழ்ந்து வந்தார். பின்பு தனது மூன்று செல்ல மகள்களின் கல்விக்காக கனவருடன் கோயமுத்தூர் வந்து செட்டில் ஆனார்.

அதன் பின்னர் சினிமாவில் குணசித்திர வேடங்களாக இருந்தாலும் சரி, அம்மாவாக இருந்தாலும் சரி யதார்த்த நடிப்பை வெளிப்படுத்தும் லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு தனி ஃபேன்ஸ் உண்டு. நடிப்பதில் மட்டுமில்லை இவர் ‘அம்மணி’, ‘நெருங்கி வா முத்தமிடாதே’, ‘ஆரோகனம்’ ‘ஹவுள் ஓனர்’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார். அடிக்கடி சமூகவலைதளத்தில் கருத்துக்களை வெளியிட்டு ஒரு லைம் லைட்டிலேயே இருப்பவர் இவர்.

எந்த ஒரு பிரச்சனைக்கும் தைரியமாக குரல் கொடுப்பவர். சமூகவலைத்தளங்களில், யூடியூப்பில் லட்சுமி ராமகிருஷ்ணனின் டாக் எப்போதுமே வைரல் தான். இவ்வளவு சீரியஸான நபரான லட்சுமி உண்மையில் தனது குடும்பத்துடன் இருக்கும் போது பாசக்கார அம்மாவாக தான் எப்போதுமே இருப்பார். லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்திய சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி பல்வேறு விமர்சனங்களை பெற்றாலும் இன்றளவு யூடியூப்பில் இந்த நிகழ்ச்சியின் எபிசோடுகளை தேடி பார்ப்பவர்கள் உண்டு.

Leave a Reply

Your email address will not be published.