14 வருஷத்துக்கு முன்னாடி பார்த்த முத்தழகாகவே மீண்டும் மாறிய பிரியாமணி! எடையை குறைத்து அவரது தற்போது புகைப்படம்

நடிகை பிரியாமணி 1984 ஆம் ஆண்டில் பிறந்தவர் . இவர் 2006 ஆம் ஆண்டு தமிழ் திரைப்படம் பருத்திவீரனில் முத்தழகு எனும் கதாபாத்திரத்தில் நடித்ததற்காக ‘சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருது’ கொடுக்கப்பட்டது. இவரை முதன்முதலில் சினிமாத்துறைக்கு அறிமுகபடுத்தியவர் தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் பாரதிராஜா அவர்கள் தான்.2003-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான எவரே அடகாடு எனும் படத்தின் மூலம் கதாநாயகியாக தன் பயணத்தை தொடங்கி பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

அந்த படத்தில் இவரது இயல்பான நடிப்பு மற்றும் முக பாவனைகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.நடிகை பிரியா மணி, பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருந்தாலும் அனைவருக்குமே முதலில் நினைவுக்கு வருவது பருத்தி வீரன் முத்தழகு கதாபாத்திரம் தான்.இந்த படம் வெளியாகி சுமார் 14 வருடங்கள் ஆகும் நிலையில், மீண்டும் அச்சு அசல் முத்தழகாக மாறி விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார் பிரியாமணி.இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

என்னதான் படத்தில் குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் நடித்தாலும், இன்ஸ்டாகிராமில் உடல் எடையை குறைத்து… செம்ம ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார் பிரியாமணி.தற்போது 14 வருடத்திற்கு முன் பார்த்த முத்தழகாகவே மாறி, போஸ் கொடுத்துள்ளார். இவரது லேட்டஸ்ட் பாவாடை தாவணி புகைப்படம், ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.