கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் 103 கேட்சுகள் பிடித்து முதலிடத்தில் உள்ளார். அடுத்த இடத்தில் 100 கேட்ச்களுடன் தோனி இரண்டாவது இடத்தில் நீடிக்கிறார்.
உலக அளவில் அதிக டி20 லீக் போட்டிகளில் பங்கேற்ற முதல் வீரராகத் திகழும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் மகேந்தரசிங் தோனி, நேற்று நடைபெற்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் கே.எல்.ராகுலின் விக்கெட்டுக்கான கேட்ச்சைப் பிடித்ததன் மூலம், கிரிக்கெட்டில் 100 கேட்ச்களைப் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

சார்துல் தாகூர் 17.2ஆவது ஓவரில், கே.எல்.ராகுலுக்கு ஆஃப் திசையில் பந்து வீசினார். கே.எல்.ராகுல் அதை தூக்கி அடிக்க முற்பட்டபோது, பந்து பேட்டில் உரசி, கீப்பருக்கு வலது திசையில் சென்றது. 39 வயாதாகும் விக்கெட் கீப்பர் மகேந்திரசிங் தோனி துரிதமாகச் செயல்பட்டு, தாவி கேட்ச் பிடித்தார். இதன்மூலம், ஐபிஎல் கிரிக்கெட்டில் 100 கேட்ச்களை பிடித்த இரண்டாவது விக்கெட் கீப்பராக திகழ்கிறார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் 103 கேட்சுகள் பிடித்து முதலிடத்தில் உள்ளார். அடுத்த இடத்தில் 100 கேட்ச்களுடன் தோனி இரண்டாவது இடத்தில் நீடிக்கிறார். பார்த்திவ் படேல் 66 கேட்சுகள் பிடித்து மூன்றாவது இடத்தை தக்கவைத்துள்ளார். இத்துடன், விக்கெட் கீப்பர்களை தவிர்த்து 100 கேட்சுகளை பிடித்த வீரராக சுரேஷ் ரெய்னா திகழ்கிறார். சொந்த காரணங்களுக்காக ரெய்னா ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
