106 வயதிலும் இப்படியா! பியோனா வாசித்து காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்திய பாட்டி!

சாதிக்க வயது தடையில்லை என்பார்கள். அதனை மெய்ப்பிக்கும் வகையில் 106 வயது மூதாட்டி ஒருவர் பியானோ வாசிக்கும் காட்சி காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது. பாரிஸ் நகரில் வசித்து வரும் கோளேட்டே மேஸி என்ற மூதாட்டி ஒருவர் தனது 106 வயதிலும் தளராது பியானோ வாசித்து தனது 6-வது இசை தொகுப்பை வெளியிட உள்ளார். இவர், இசை மீது அலாதி ஆர்வம் கொண்ட மூதாட்டி, தன்னுடைய 4 வயது முதலே பியானோ வாசித்து வருவதாக தெரிவித்துள்ளார். மேலும், தன்னுடைய சோகம், சந்தோஷம் என அனைத்து நேரங்களிலும் பியானோ வாசித்து தன்னுடைய உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். இவரின் முயற்சிக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published.