தனது கலகலப்பான பேச்சாலும் நகைச்சுவையாலும் ரசிகர்களைக் கவர்ந்த தொகுப்பாளினி தான் பிரியங்கா. ஒல்லி பெல்லி நிகழ்ச்சியின் போட்டியாளராக பங்கேற்றவர் பிரியங்கா. தொகுப்பாளினி என்றாலே தமிழ் சினிமா ரசிகர்களுக்கு முதலில் நியாபகம் வருவது டிடி தான். இவருக்கு அடுத்த படியாக மக்களின் மனதில் இடம் பிடித்தவர் தான் தொகுப்பாளினி பிரியங்கா. பிரியங்கா தேஷ்பாண்டே ஜீ தமிழில் தொகுப்பாளராகத் தனது வாழ்க்கையை தொடங்கினார். பின்னர் அவர் சன் நெட்வொர்க்கிற்குச் சென்று சன் மியூசிக் விஜே.
மேலும் அவர் சுட்டி டிவியில் நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார். பிரியங்கா எவ்வளவு தான் தன்னை கலாய்த்தாலும் அதையும் இவரே காமெடியாக்கி நிகழ்ச்சியை கொண்டு செல்வார். பிரியங்கா, மாகாபாவுடன் இணைந்து தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் ஏராளம். அந்த வகையில், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் தான் தொகுப்பாளினி பிரியங்கா.
நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக கொண்டு செல்வதில், வல்லவரானவர் பிரியங்கா. இவர் விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக் என பல பிரபல நிகச்சிகளை தொகுத்து வழங்குகிறார். இந்த நிலையில் தொகுப்பாளினி பிரியங்காவின் ஒரு புகைப்படம் அதிகம் ஷேர் ஆகி வருகிறது. 10 வருடத்திற்கு முன் பிரியங்கா எப்படி இருந்தார் என்ற புகைப்படம் தான். இதோ உங்கள் பார்வைக்கு..