10 வருடத்திற்கு முன் சூர்யாவிடம் நான் டாக்டர் ஆகணும் கேட்ட ஏழை சிறுவன்! தற்போதைய நிலை என்ன தெரியுமா?

தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக விளங்கி வருபவர் நடிகர் சூர்யா. நேருக்கு நேர் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் சூர்யா. பாலாவின் இயக்கத்தில் பிதாமகன் திரைப்படத்தில் நடித்தார். இப்படம் சினிமா வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அதன் பின்னர் காக்க காக்க, பேரழகன், கஜினி, ஆறு, வாரணம் ஆயிரம் என பல வெற்றி படங்களில் நடித்தார். அகரம் என்னும் தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

10 வருடம் முன் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடிகர் சூர்யா சார்பாக அகரம் மூலம் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த நந்த குமார் என்பவர் கலந்து கொண்டு இருந்தார். அந்த நிகழ்ச்சியில் சூர்யாவிடம் உதவி கேட்டு இருந்த நந்தகுமார் நான் தற்போது பன்னிரெண்டாம் வகுப்பு படித்திருக்கிறேன். என்னுடைய மதிப்பெண் 1160 எனக்கு மருத்துவம் படிக்க வேண்டும் என்று ஆசை ஆனால் எனக்கு வசதி இல்லை என்று கூறி இருந்தார்.

இப்படி ஒரு நிலையில் நடிகர் சூர்யா உங்கள் பையன் கண்டிப்பாக டாக்டர் படிப்பான் என்று உறுதியளித்திருந்தார். பத்து வருடங்களுக்கு முன்னர் கூலித் தொழிலாளியின் மகனாக இருந்த நந்தகுமார் தற்போது மருத்துவர் ஆக மாறியிருக்கிறார். சூர்யா செய்திருக்கும் இந்த உதவியை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!