10 வயதில் 190 கிலோ எடை இருந்த மகனை காப்பாற்ற போராடிய பெற்றோர்! இப்போது அவன் எப்படி இருக்கிறான் தெரியுமா?

இந்தோனேஷியாவில் 190 கிலோ எடை கொண்ட சிறுவன் தற்போது கடும் உணவுக் கட்டுப்பாட்டு மற்றும் உடற்பயிற்சியால் பாதி எடை குறைந்து சாதித்து காட்டியுள்ளான்.இந்தோனேஷியாவின் மேற்கு ஜாவாவில் இருக்கும் சிபுர்வசரி குக்கிராமத்தை சேர்ந்த தம்பதி அதி சோமந்திரி (47)-ரொகாயா (37).இந்த் தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். அதில் ஆர்யா பெர்மனா என்ற சிறுவன் தன்னுடைய பத்து வயதில் 190.5 கிலோ எடை கொண்டிருந்தான்.

இதனால் இந்தோனேசியாவில் அதிக எடை கொண்ட சிறுவன் என்று அதிகளவில் பேசப்பட்டான். சிறுவன் நாள் ஒன்றிற்கு 5 வேளை சாப்பிடுவான்.சாதம், மீன், மாட்டிறைச்சி, காய்கறி சூப் என்று எல்லாவற்றையும் சாப்பிடுவான். அதுவும் 2 ஆண்கள் ஒரு நாளைக்கு எவ்வளவு சாப்பிடுவார்களோ, அந்தளவுக்கு சாப்பிடும் பழக்கம் உள்ளவன்.

இப்படி தொடர்ந்து சாப்பிட்டு வந்ததால், உடல் எடை அதிகரித்தது. உடல் எடை அதிகரிப்பின் காரணமாக சிறுவன் நிற்க முடியாமல் தரையில் தான் படுத்து கிடந்தான்.இவர் பிறக்கும் போது சாதரண குழந்தை போன்று தான் இருந்துள்ளான். 2 வயதிற்கு மேல் சென்றவுடன் இவனின் எடை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே சென்றது.இப்படி உடல் எடை அதிகரித்து கொண்டே சென்றதால், அவனின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று அவனது பெற்றோர்கள், கிராமத்தில் இருக்கும் மருத்துவர்களை எல்லாம் அழைத்து வந்து பார்த்துள்ளார்.

ஆனால் மருத்துவர்களால் அவனிடம் எந்த ஒரு குறைப்பாட்டையும் பார்க்க முடியவில்லை.சிறுவனின் எடை தொடர்ந்து அதிகரித்த படி இருந்ததால், மருத்துவர்கள் குழப்பமடைந்தனர்.இறுதியில் மருத்துவர்கள், உணவியல் வல்லுநர்களின் அறிவுரைப்படி இனிப்பு, இனிப்பு கலந்த குளிர்பானங்கள், சர்க்கரை சேர்த்த உணவு வகைகளை ஆர்யாவுக்கு தவிர்க்கும் படி அறிவுறுத்தியுள்ளனர்.

அதைத் தொடர்ந்து கடும் உடற்பயிச்சி எப்படி மேற்கொள்வது என்று சொல்லிக் கொடுத்துள்ளனர்.தற்போது ஆர்யா பெர்மனாவுக்கு வயது 12. இரண்டு ஆண்டு கடும் போராட்டம், உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சியால் தற்போது 95 கிலோ எடையைக் குறைத்து சாதித்துவிட்டான்.கடந்த ஏப்ரல் மாதம் எடை குறைப்பு அறுவை சிகிச்சையும் ஆர்யாவுக்கு செய்யப்பட்டது. அதன்பிறகு 3 வாரங்களில் அவனது எடை கணிசமாகக் குறைந்தது.

தற்போது நன்றாக நடக்கிறான். நன்றாக படித்து வந்த ஆர்யா, எடை அதிகரிப்பால் பள்ளிக்கு செல்ல முடியவில்லை. தற்போது 2 ஆண்டுகள் கழித்து மீண்டும் பள்ளிக்குச் செல்ல தொடங்கிவிட்டான்.சுறுசுறுப்பாக இருக்கிறான், நண்பர்களுடன் பேட்மின்டன், கால்பந்து ஆடுகிறான். தினமும் 3 கி.மீற்றர் தூரம் நடை பயிற்சி மேற்கொள்கிறான். பழைய டி ஷர்ட்டை அணிந்து கொள்கிறான். மோட்டார் சைக்கிள் ஓட்ட பழகிக் கொண்டான்.

இப்போது நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நடக்கிறேன், விளையாடுகிறேன். கால்பந்தாட்டம் தான் எனது விருப்பம். தொழில்முறை கால்பந்தாட்ட வீரராக வரவேண்டும் என்பதுதான் எனது ஆசை. லிவர்பூல் எப்சி கிளப்தான் எனக்கு பிடித்தமானது. ராபர்ட்டோ பிர்மினோதான் எனக்கு பிடித்த கால்பந்தாட்ட வீரர். அவரை போல நான் விளையாட விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்..

மேலும் ஆர்யாவின் எடை குறைப்புக்குப் பின்னால் அவனது தாயும் தந்தையும் பட்ட கஷ்டங்கள் அதிகம். அக்கம் பக்கத்தினர், உறவினர்களிடம் எல்லாம் கடன் வாங்கி, ஆர்யாவைக் காப்பாற்றி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.