பிரபல நடிகை சினேகா தன் பிரசவத்திற்குப் பின்பு தனக்கு அழகிய பெண் குழந்தை பிறந்த மகிழ்ச்சியை ரசிகர்களுடன் புதிய பதிவு மூலம் பகிர்ந்துள்ளார். தமிழ்சினிமாவில் புன்னகை அரசி என செல்லமாக அழைக்கப்படுபவர் நடிகை சினேகா. இவர் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமான நடிகையாக வலம் வந்தவர்.

தற்போது நடிகை சினேகா திருமணத்திற்கு பின்பு அவர்களுக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. இன்னிலையில் சினேகாவுக்கு தற்போது இரண்டாவது முறையாக செல்லமான பெண் குழந்தை பிறந்து உள்ளது. குழந்தை பிறந்து சில நாட்களே ஆன நடிகை சினேகா முதல் முறையாக தன்னுடைய குழந்தை பிறந்த பின்பு புதிய பதிவை வெ ளி யிட்டு அதில் தன் தாய்மையையும் குழந்தை மீது தான் வைத்திருக்கும் அன்பையும் விளக்கிக் கா ட்டி யிருக்கிறார். இந்த பதிவை படிக்கும் பொழுது மிகவும் உருக்கமான உணர்வை அளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை சினேகா இந்த பதிவில் கடந்த வாரம் இதே தினத்தன்று எங்கள் வீட்டிற்கு அழகிய தேவதை வருகை தந்தார். அவனுடைய வாழ்க்கை என்னுடைய வாழ்க்கையை மேலும் அழகு ஊட்டி உள்ளது. எங்களுக்காக ஆசீர்வாதங்களையும் பிரார்த்தனைகளை வைத்து அனைவருக்கும் மிகுந்த நன்றி என கூறியிருக்கிறார். இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் சினேகா விற்கும் குட்டி ஏஞ்சலிருக்கும் வாழ்த்துக்களையும் ஆசீர்வாதம் வழங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.