10 ஆண்டு பிரித்தானியாவில் வசித்து சொந்த ஊர் திரும்பிய இளம்தம்பதி செய்து வரும் ஆச்சரிய செயல்! கொட்டும் வருமானம்..!

ராம்டே மற்றும் பாரதி என்ற தம்பதி கடந்த 2006ல் இருந்து 2016 வரை பிரித்தானியாவில் வசித்து வந்தனர். அங்கு இருவரும் பணியில் இருந்த சூழலில் ராம்டேவின் வயதான பெற்றோர் இந்தியாவில் வசித்து வந்தனர். இந்த நிலையில் பெற்றோர் குறித்து கவலைப்பட்ட ராம்டே மனைவி மற்றும் குழந்தையுடன் 2016ல் இந்தியா திரும்பினார். இதன் பின்னர் ராம்டே – பாரதி தம்பதி செய்து வரும் செயல் தான் ஆச்சரியம். அதன்படி பசு, எருமைகள், கோழி, வாத்து உள்ளிட்ட விலங்குகளை வளர்க்க தொடங்கி விவசாயம் செய்ய தொடங்கினர்.

இது தொடர்பான வீடியோக்களை யூ டியூப்பில் பதிவேற்றம் செய்தனர். தற்போது இவர்களின் வீடியோவுக்கு அதிகளவில் பார்வையாளர்கள் வருவதோடு, லைக்குகள் அள்ளுகிறது. இதன்மூலம் மாதம் ரூ 5 லட்சம் வரை வருமானம் ஈட்டுகின்றனர். இது குறித்து தம்பதி கூறுகையில், நாங்கள் பிரித்தானியாவில் வசித்தாலும், எங்களுக்கு இந்த கிராம வாழ்க்கை பிடித்துள்ளது. எங்களின் முக்கிய வேலை விவசாயம் தான், விளையாட்டாக தான் அதை வீடியோ எடுத்து யூடியூப்பில் போட்டோம்.

அதற்கு இப்படி ஒரு வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை. எங்கள் நோக்கம் பணம் சம்பாதிப்பது அல்ல, கிராமத்து வாழ்க்கை முறை எவ்வளவு அழகானது மற்றும் அவசியமானது என்பதை உலகிற்கு காட்ட வேண்டும் என்பது தான். தற்போது எங்கள் யூ டியூப் சேனல்களுக்கு 7 லட்சத்துக்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்ஸ் உள்ளனர் என கூறியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.