தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளராக வளம் வருபவர் யுவன் சங்கர் ராஜா. முன்னணி இசையமைப்பாளர் இளையராஜாவின் மகன் தான் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. காதல், சோகம், மகிழ்ச்சி என அணைத்து விதமான உணர்வுகளுக்கும் ஏற்ற பாடல்களுக்கு இசை அமைத்துள்ளார். தமிழ் சினிமாவில், இசையமைப்பாளர்கள் பலரும் தற்போது நடிகர்களாக மாறி வருகின்றனர். விஜய் ஆண்டனி, ஜிவி பிரகாஷ் வரிசையில் விரைவில் யுவன் சங்கர் ராஜாவையும் கதாநாயகனாக எதிர்பார்க்கலாம்.

யுவனின் சமீபத்திய ட்விட்டர் பதிவுகளில், தனது புகைப்படங்கள் சிலவற்றை பதிவு செய்து கொண்டிருக்கிறார். ஒரு நடிகர், நடிகைகள் எடுக்கும் போட்டோசூட் படங்கள் போல அவை இருக்கின்றன. ஏற்கனவே சில பாடல்களுக்கு திரையில் தனது முகத்தை காட்டிய இவன் தனது நடிக்கும் ஆர்வத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
தற்போது அவர் வெளியிடும் புகைப்படங்கள் அதற்கான முன்னோட்டமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவரது சகோதரர் வெங்கட் பிரபு ஏற்கனவே, யுவன் சங்கர் ராஜாவை நடிக்க வைக்க வேண்டும் என்ற முயற்சியில் இறங்கியிருக்கிறார். மேலும், இயக்குநர்கள் பலரும் யுவனுக்கு நெருங்கிய நண்பர்களாக இருக்கின்றனர். திரைக்குப் பின்னால் இருக்கும் யுவனை திரைக்கு முன் கொண்டு வரப்போகிறவர் யார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
எதிர்த்து நில் எதிரியே இல்லை,
நம்பிக்கை கொள் தடைகளே இல்லை. pic.twitter.com/8tggggDlhP— Raja yuvan (@thisisysr) August 22, 2020