ஹீரோவாக போகும் பிக் பாஸ் முகேன்..! ஈழத்து தர்ஷன் நிலை குறித்து வருத்தத்தில் இலங்கையர்கள்..

கடந்த சில வருடங்களுக்கு முன் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி அனைவராலும் ரசித்து பார்க்கப்பட்ட ஒன்றாகும். பிக் பாஸ்ஸின் மூன்று சீசன்களையும் தொகுத்து வழங்கியவர் உலக நாயகன் கமல்ஹாசன். பிக்பாஸ் 3 டைட்டில் வின்னரான முகென் ராவ் கோலிவுட்டில் ஹீரோவாக அறிமுகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முகென் ராவ்வின் பாடல்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் மலேசியா சென்ற முகென் ராவ்வுக்கு தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோ வாய்ப்பு கிடைத்துள்ளது. ‘வெப்பம்’ பட இயக்குநர் அஞ்சனா அலிகான் இயக்கும் படத்தில் நாயகனாக நடிக்க அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முகென் ராவ்வுக்கு ஜோடியாக ஜி.வி.பிரகாஷ் உடன் பேச்சுலர் படத்தில் நாயகியாக நடித்த திவ்ய பாரதி நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதேவேளை, பிக்பாஸ் 3 வெற்றி விழா மேடையில் தர்ஷனுக்கு ஹீரோ வாய்ப்பை கமல்ஹாசன் வழங்கினார். அதைத்தொடர்ந்து தற்போது முகென் ராவ்வுக்கும் ஹீரோ வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் தர்ஷனின் படம் குறித்த அறிவிப்புகள் எதுவும் வராத நிலையில் முகேனின் படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த தகவல் முகேன் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும் தர்ஷனின் இலங்கை ரசிகர்கள் சற்று வருத்தத்தில் உள்ளனர். முதலில் திரையில் ஹீரோவாக தோன்றப் போவது யார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *