ஹீரோவாக போகும் பிக் பாஸ் முகேன்!! படம் குறித்து வெளியான தகவல்…

கடந்த சில வருடங்களுக்கு முன் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி அனைவராலும் ரசித்து பார்க்கப்பட்ட ஒன்றாகும். பிக் பாஸ்ஸின் மூன்று சீசன்களையும் தொகுத்து வழங்கியவர் உலக நாயகன் கமல்ஹாசன். பிக்பாஸ் 3வது சீசனின் வெற்றியாளர் முகென். மலேசியாவை சேர்ந்த இவர் நிறைய ஆல்பங்கள் பாடியுள்ளார், நிகழ்ச்சியில் முகென் பாடிய ஒரு பாடல் ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்பட்டது. அவருடன் பிக்பாஸில் கலந்துகொண்ட பலரும் படங்கள் நடிக்க ஆரம்பித்துவிட்டனர்.

இதேவேளை, பிக்பாஸ் 3 வெற்றி விழா மேடையில் தர்ஷனுக்கு ஹீரோ வாய்ப்பை கமல்ஹாசன் வழங்கினார். இந்நிலையில் தர்ஷனின் படம் குறித்த அறிவிப்புகள் எதுவும் வராத நிலையில் முகேனின் படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த தகவல் முகேன் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கின்றனர். இதுவரை இவர் படம் குறித்து பேசாமல் இருந்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் மலேசியா சென்ற முகென் ராவ்வுக்கு தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோ வாய்ப்பு கிடைத்துள்ளது. வெப்பம் படம் மூலம் இயக்குனராக அறிமுகமான அஞ்சனா அலி இயக்கத்தில் முகென் முதல் படம் நடிக்க இருக்கிறாராம். ரத்னவேல் ஒளிப்பதிவு, ஆண்டனி எடிட்டிங் கவனிக்க நிவாஸ் பிரசன்னா இசையமைக்கிறார். அதோடு மிஸ் இந்தியா அனு கீர்த்தி தான் இப்படத்தில் முகெனுக்கு ஜோடியாக நடிக்கிறாராம்.

Leave a Reply

Your email address will not be published.