ஹீரோக்களுக்கு இணையாக போட்டோஷூட் செய்த காமெடி நடிகர் மனோபாலா… இணையத்தில் வைரல் புகைப்படம்!

நடிகர் மனோபாலா தமிழ் சினிமாவில் இயக்குனர், தயாரிப்பாளர், காமெடி மற்றும் குணச்சித்தரம் கதாபாத்திரங்களில் நடித்து வருபவர். 1970 களின் தமிழ் திரையுலகில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார், கமல்ஹாசனின் பரிந்துரையால் பாரதியராஜாவுடன் தனது புதிய வார்புகல் (1979) திரைப்படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்தார் மனோபாலா. 1982-ம் ஆண்டு கார்த்திக் நடிப்பில் வெளியான ஆகாய கங்கை என்ற படத்தின் மூலம் இயக்குனராக மாறினார் மனோபாலா.

கார்த்திக், விஜயகாந்த் மற்றும் மோகன் போன்ற முன்னணி நடிகர்களை வைத்து இவர் படம் இயக்கியுள்ளார். ரஜினியை வைத்து ‘ஊர் காவலன்’ என்ற வெற்றி படத்தையும் மனோபாலா இயக்கியுள்ளார். மனோபாலா 40 திரைப்படங்களையும், 16 தொலைக்காட்சித் தொடர்களையும் 3 தொலைக்காட்சித் திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். கமலஹாசனுக்கும் இவருக்கும் இடையே துவக்கத்தில் இருந்த நெருக்கம், இயக்குனர் சங்கப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டது. இருவருக்குள்ளும் பேச்சுவார்த்தை இல்லாமல் போனது.

இந்நிலையில், 66 வயதாகும் மனோபாலா சமீப காலமாக நகைச்சுவை நடிகராக கலக்கோ கலக்குவென கலக்கி வருகிறார். தற்போது இவர் போட்டோஷூட் ஒன்றை எடுத்துள்ளார். இளம் நடிகர்கள், நடிகைகள் போட்டோஷூட் எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிடுவது போல், மனோபாலாவும் போட்டோஷூட் எடுத்து வெளியிட்டிருக்கிறார். இளமை நாயகன் என்ற டைட்டிலுடன் வெளியாகி இருக்கும் இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

 

Leave a Reply

Your email address will not be published.