ஹிந்தியில் ரீமேக் ஆகப்போகும் லோகேஷ் கனகராஜின் படம்.. இந்த இயக்குனர் தான் ரீமேக் செய்கிறாரா..?

தமிழ் சினிமாவில் தற்போது வளந்து வரும் இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். மாநகரம் மற்றும் கைதி உள்ளிட்ட படங்களின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் தான் மாஸ்டர். கொரோனா காரணமாக தள்ளிப்போன இப்படத்தின் ரிலீஸ் 2021 ஆம் ஆண்டின் பொங்கல் அன்று திரைக்கு வரும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மாஸ்டர் படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் உலக நாயகன் கமல் ஹாசனை வைத்து தான் படம் எடுக்க போகிறார் என அதிகாரப்பூர்வமாகவே தெரிந்துவிட்டது. இப்படத்தின் அறிவிப்பு போஸ்டரில் ” கமல் ஹாசன் 232 ” என்று ஒர்கிங் டைட்டில் வைத்துள்ளனர். இந்நிலையில் இப்படத்தில் கமல் ஹாசனுக்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்க போகிறார் என தகவல்கள் பரவி வருகிறது.

இந்நிலையில் இவர் இயக்கத்தில் முதலில் வெளியான மாநகரம் திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யவுள்ளனர். இதனை சந்தோஷ் சிவன் இயக்கவுள்ளதாகவும் விக்ராந்த் மாசே மற்றும் சஞ்சய் மிஸ்ரா என இரண்டு ஹீரோக்கள் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இவரின் கைதி திரைப்படமும் ஹிந்தியில் ரீமேக் ஆகவுள்ளது, இதில் நடிகர் அஜய் தேவகன் நடிக்கவுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *